The five major diseases that affect the plants are highly controlled and ...

1.. சார்கோல் தண்டு முதல் நோய்

இந்நோயை ஜம்மு மற்றும் காஷ்மீர், மேற்கு வங்காளம், ஹரியானா, இராஜஸ்தான், டெல்லி, உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், ஆந்திரபிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் பரவுயுள்ளது.

அறிகுறிகள்

செடி பூத்து 1-2 வாரங்கள் கழித்து இந்நோய் தோன்றுகிறது. வெளி இடைக்கணுவின் கீழ்பகுதி வெளில் மஞ்சள் நிறமாக மாறுகிறது.

இடைக்கணுவின் முளைக்கும் பகுதி மிகவும் மோசமாக அழுகி இருக்கும்.

நோய்க்கான காரணி நாற்றாங்கால் பயிரின் வேரினுள் நுழைந்து விடுகிறது. செடி அடையும் போது தண்டின் உள்பகுதி கருப்பு நிறமாக மாறியும் உதிர்ந்தும் காணப்படுகிறது.

இவ்வகையான அறிகுறிகள் தண்டின் கீழ்ப்பகுதியில் காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட இடத்தை உற்று பார்த்தால் அதில் சிறிய கருப்பு நிறமுடைய நோய்க்கான காரணியை தோற்றுவிக்கும் ஸ்கிளிரோஷியா காணப்படுகிறது.

இந்நோய்க்கான காரணி தானியத்தின் மேல்பகுதியை பாதித்து அதை கருப்பாக்குகிறது.

மண்ணின் வெப்பநிலை அதிகமாக இருந்தால் மற்றும் குறைவான ஈரப்பதம்

கட்டுப்பாடு

** பூக்கும் நேரத்தில் குறைவான தண்ணீர் கிடைப்பதால் இந்நோய் ஏற்படுகிறது. எனவே அதை தவிர்க்கவும்.

** டிரைக்கோடெர்மா விரிடியை தொழு உரத்துடன் 2.5 கிலோ / எக்டர் என்ற அளவில் பொடலாம். (பத்து நாட்களுக்கு முன் கலந்து வைத்து பின்னர் போடலாம்).

2.. டர்கிசம் இலைக்கருகல் நோய்:

இந்நோய் ஜம்மு மற்றும் காஷ்மீர், ஹிமாச்சலப்பிரதேசம், மேற்கு வங்காளம், சிக்கிம், மேகாலாயா, திரிபுரா, அஸ்ஸாம், உத்திரப்பிரதேசம், உத்திராஞ்சல், பீகார், மத்தியப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இடங்களில் பரவியுள்ளது.

அறிகுறிகள்

இந்நோயினால் பாதிக்கப்பட்ட செடி மிக சிறிய பொருளாதார சேதாரத்தை ஏற்படுத்தகிறது. இந்நோயின் முந்திய நிலையில் சிறிது நீள் வட்டவடிவ தண்ணீரில், மூழ்கியுள்ள அளவு சிறிய புள்ளிகள் உருவாகும்.

இவ்வகையான புள்ளிகள் பெரியதாகவும், நீளவடிவமுள்ள புள்ளிகளாகவும், இறந்த செல்களைக் கொண்டும் உள்ளன.

அறிகுறிகள் முதலில் கீழ்ப்பகுதியிலுள்ள இலைகளிலும் தோன்றி, அவை அளவிலும், எண்ணிக்கையிலும் அதிகரிக்கின்றன. இவ்வகையான அறிகுறிகள் செடிகள் காயும் வரை தோன்றுகின்றன. புள்ளிகள் பெரியதாகவும், வெளிர்பச்சை, நிறத்திலும் இருக்கும்.

கட்டுப்பாடு

நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களான, சால்டாஸ், டெக்கான் 105, ட்ரிசுலேட்டா, டெக்கான் 109, பயிரிடலாம். மேங்கோசெம் 2 கிராம் / லிட்டர் என்ற அளவில் தெளிக்கலாம்.

3.. அடிச்சாம்பல் நோய்

இந்நோய் குஜராத், மஹாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இடங்களில் பரவியுள்ளது.

அறிகுறிகள்:

இந்நோயினால் பாதிக்கப்பட்ட செடி வெளிர் நிறத்திலும், வளர்ச்சி குறைந்தும், இலையின் மேல் வெள்ளை – வரிக்கோடுகள் கொண்டும், குறைந்து விதை அமைப்பு கொண்டும் காணப்படும்.

எதிர்ப்புசக்தி கொண்ட செடி மட்டும் நோய்க்கான அறிகுறிகளை தோற்றுவிக்கின்றன. ஆனால் செடியின் மகசூலில் பாதிப்பு ஏற்படுத்தவதில்லை.

கட்டுப்பாடு

** அசைல்அலனின் பூசணக்கொல்லியான மெட்டாலக்சில் 6 கிராம் கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்யவும்.

** இந்நோயினால் பாதிக்கப்பட்ட செடிகளை அறிகுறிகள் தெரிந்தவுடன் பிடுங்கி எறியவும்.

** விதைகளை ஆப்ரான் 35 டபிள்யூ பி 2.5 கிராம் / கிலோ என்ற அளவில் நேர்த்தி செய்யலாம்.

** நோய் எதிர்ப்பு இரகங்கள் _ கோ எச்(எம்) 5, இன்டிமிட், 345, இஹெச், 43861, கேஹெச்-526, ஏஹச் – 36.

** மெட்டாலக்சில் 1 கிராம் / லிட்டர் மெட்டாலக்சில் + மேங்கோசெப் 2.5 கிராம் / லிட்டர் என்ற அளவில் தெளிக்கலாம்.

4.. பிரெளன் வரிக்கோடுகளைக் கொண்ட அடிச்சாம்பல் நோய்

அறிகுறிகள்:

அடியில் உள்ள இலையில் இலைக்கருகல் ஆரம்பித்து. இலைகள் வெளிர்நிறமாக மாறி வரிக்கோடுகளை கொண்டு மாறி இருக்கும்

பின்னர் இந்த வரிக்ககோடுகள் சிவப்பு நிறத்திலிருந்து பழுப்பு நிறமாக மாறுகின்றன. பின்னர் தோன்றும் கருகல் அறிகுறி வரிகளாகவும், திட்டுதிட்டாகவும் மாறுகின்றன.

செடி பூப்பதற்கு முன் பாதிக்கப்பட்டால் இறந்துவிடக்கூட வாய்ப்பு உண்டு மற்றும் விதைகள் உற்பத்தியாவது குறைகிறது.

வெள்ளைப் பூசண வித்துக்கள் இலையின் இரண்டு பாகத்திலும் தோன்றுகின்றன.

இதில் பூக்கும் பாகமும், காய்க்கும் பாகமும் மாறுவதில்லை மற்றும் இலைகள் உதிர்கின்றன.

கட்டுப்பாடு

** அசைல்அலனின் பூசணக் கொல்லியான, மெட்டாலிக்சில் (6 கிராம்) மற்றும் இலைகள் உதிர்வதில்லை.

** நோய் எதிர்ப்புத் தன்மையுள்ள இரகங்கள். பிரபாத், கோஹினூர், ஐசிஐ-703, பிஎசி – 9401, பிஎம்இசட்- 2, சீபெக் – 2331.

5.. மேய்டிஸ் கருகல்

அறிகுறிகள்

இளம் புள்ளிகள் சிறியதாகவும், வைரத்தைப் போன்ற வடிவுடையதாக இருக்கும்.

இவை பெரியதாகும் போது, நீளமாகவும் இருக்கும். இவ்வகையான இலைப்புள்ளிகள் ஒன்று சேர்ந்து, இலையில் எரிந்துபோன தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. இவ்வகையான புள்ளிகள் வீரிய இரகத்திற்கும், மற்ற இரகத்திற்கும் மாறுபடுகின்றன.

கட்டுப்பாடு

** மேங்கோசெப் 2 கிராம் / லிட்டர் என்ற அளவில் தெளிக்கவும்.

** நோய் எதிர்ப்புக் கொண்ட இரகங்களான டெக்கான், விஎல்42, பிரபாத், கேஹச்.5901ஈ பிஆர்ஓ-324, 339, ஐசிஐ – 701, எஃப் – 701, எஃப் – 7012, சார்டஜ், டெக்கான் 109 பயிரிடலாம்.