தென்னையில் போரான் சத்து பற்றாக்குறையால் ஏற்படும் விளைவுகள்…
தென்னையில் போரான சத்து பற்றாக்குறையால் கொண்டை வளைதல் / இலைபிரியாமை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
அறிகுறிகள்:
1.. மூன்று வயதுடைய மரங்களில் இலைகள் சாதாரண முறையில் விரிவடையாமல் ஒன்றுக்கொன்று வெளிவர இயலாத நிலையில் காணப்படும்.
2.. இலைகளின் வளர்ச்சி மிகவும் குறைந்து மட்டைகள் குருத்து பாகத்தில் இருந்து வளைந்து காணப்படும்.
நிவர்த்தி செய்யும் முறைகள்:
1.. மரத்திற்கு 200 கிராம் போராக்ஸ் தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு அளிப்பதால் ஓலைகள் நன்றாக பிரிந்து வளர்ச்சியடைகின்றது.
2.. வேர் மூலம் 25 பிபிஎம் அளவு போரான் கரைசலை செலுத்துவதால் மரம் போரான் குறைபாட்டில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகின்றது.