மா மற்றும் சப்போட்டாவில் அதிக மகசூலைப் பெற மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்ப வழிகள்…
மா மரம்:
ஒட்டு மாங்கன்றுகளில் வேர் பாகத்திலிருந்து வளரும் தளிர்களை நீக்கிவிடவேண்டும்.
ஐந்து ஆண்டுகள் வரை பூக்கும் பூக்களை கிள்ளிவிட வேண்டும்.
பின்னர் நல்ல காய்கள் பிடிக்கும் வகையில் உள்நோக்கி வளரும் கிளைகளையும், பலவீனமான கிளைகளையும் நெருக்கமான நுனிக் கிளைகளையும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கவாத்து செய்ய வேண்டும்.
இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பசுந்தாள் உரப் பயிர்களை பயிரிட்டு மடக்கி உழுதல் வேண்டும்.
மா மரத்தில் ஊடுபயிராக 5 ஆண்டு வரையிலும் மரவள்ளி, நிலக்கடலை மற்றும் காய்கறிப் பயிர்களை பயிரிட்டு கணிசமான வருமானம் பெறலாம்.
சப்போட்டா:
சப்போட்டாவில் காய்கள் பிடிப்பதை அதிகரிக்க போரிக் அமிலம் 1 சதவீதக் கரைசலை தெளிக்க வேண்டும்.
சப்போட்டா கன்றுகளில் வேர்ச்செடியிலிருந்து வரும் துளிர்களையும், நீர் போத்துக்களையும் அவ்வப்போது நீக்க வேண்டும்.
தரை மட்டத்திலிருந்து வளரும் பக்க கிளைகளை நீக்க வேண்டும்.
சப்போட்டாவில் ஒரே ரகமாக நடாமல் பல ரகங்களை கலந்து நடவு செய்தால் அயல்மகரந்த சேர்க்கை அதிகரிக்கும். காய்கள் உற்பத்தியும் அதிகரிக்கும்.