வெளுத்து வாங்கும் கோடைக் காலத்தை தென்னந்தோப்பை பராமரிக்க சில வழிகள்…
கோடைக் காலத்தில் தென்னந்தோப்பை பராமரிக்கும் சில வழிமுறைகள்:
1.. சென்ற பருவத்தில் நட்ட தென்னங்கன்றுகளுக்கு தென்னங்கீற்று அல்லது பனை மட்டைகளைக் கொண்டு கோடையில் நிழல் கொடுக்க வேண்டும்.
2.. இதுவரை வேலி அமைக்காமல் இருந்தால் உயிர்வேலியோ, முள்கம்பி வேலியோ அமைப்பது நல்லது. இதனால் தென்னங்கன்றுகளுக்கு, ஆடு மாடுகளால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்கலாம்.
3.. பாசனநீர் வசதி உள்ளவர்கள் நேரடியாக வாய்க்கால் மூலம் நீர்ப்பாய்ச்சலாம்.
4.. தண்ணீர் வசதி குறைவாக உள்ளவர்கள் சொட்டு நீர்ப்பாசன முறையைப் பின்பற்றி தேவையான நீரை கன்றுகளுக்கு அளிக்கலாம்.
5.. இதுவும் முடியாதவர்கள் பானைமுறை மூலம் ஒவ்வொரு கன்றுக்கும் பானையைப் புதைத்து நீர் ஊற்றி கன்றுகளுக்கு அளிக்கலாம்.
6.. மேற்கண்ட ஏதாவது ஒரு முறையில் கண்டிப்பாக நட்ட கன்றுகளுக்கு நீர்பாய்ச்சினால்தான் தென்னை குறித்த காலத்தில் பூத்து காய்க்க ஆரம்பிக்கும்.
7.. வறட்சி தாங்கும் முறையாக எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் 3 அடி ஆழம் குழி தோண்டி 2 அடி ஆழத்தில் தென்னங்கன்றை நட வேண்டும். இவ்வாறு நடப்பட்ட கன்றுகள் வறட்சியைத் தாங்கி வளர்வதோடு, விரைவில் பூக்கவும் காய்க்கவும் ஆரம்பிக்கின்றன. அதிக வேர்கள் உற்பத்தியாவதால் பலத்த காற்றையும் புயலையும் தாங்கும் தன்மையும் உண்டாகிறது.