Soil testing can help us understand these factors ...
சில நேரங்களில் மண்ணின் வளம் நன்றாக இருந்தும் நல்ல விளைச்சளை தர கூடியதாக இல்லை. இதற்கு காரணம் மண்ணின் சுற்று சூழலில் உள்ள அனுகூலமற்ற நிலையாக இருக்கும்.
மண் பரிசோதனை மூலம் சத்துக்களின் அளவை அறிவதோடு மண்ணின் வளத்தை நிர்வகிக்கும் காரணிகளை பற்றியும் அறிந்து கொள்ளளாம்
மண் பரிசோதனை மூலம் நாம் அறிந்து கொள்ள கூடிய காரணிகள்
மண் சத்துக்கள்
தழை சத்து, மணி சத்து, சாம்பல் சத்து, கால்சியம், மெக்னீசியம், சல்பர், துத்தநாகம், மாங்கனீசு,இரும்பு,காப்பர்,போரான் மற்றும் மாலிப்டீனம்.
பிற காரணிகள்
சிஇசி (Cation Exchange Capacity)
CEC மூலம் மண்ணின் கெட்டிதன்மையை பற்றிய செய்தியை அறிந்து கொள்ளளாம்.CEC குறைவாக இருந்தால் மண் மணற்பாங்காக இருக்கிறது என்று அர்த்தம்.CEC நடுத்தரமாக இருந்தால் மண் மிதத்தன்மையாக இருக்கிறது என்றும் CEC அதிகம் என்றால் மண்ணில் களி தன்மை அதிகம் என்றும் அர்த்தம்.
பி.எச்
PH மூலம் மண்ணில் உள்ள அமில தன்மை மற்றும் உவர் தன்மையை கண்டு பிடிக்கலாம்.PH இன் அளவு 6.5க்கும் குறைவாக இருந்தால் அது அமில நிலமாகவும் 7.5 க்கும் மேல் இருந்தால் அது உவர் நிலமாகவும் இருக்கும்.
PH-இன் அளவு 6.5 - 7.5 ஆக இருந்தால் மண் நல்ல நிலையில் இருக்கிறது என்லாம். இந்த PHல் தான் மண்ணில் உள்ள சத்துக்கள் எல்லாம் பயிருக்கு கிடைக்கும் நிலையில் இருக்கும்.
