விவசாய அனுபவத்துல மரவள்ளி, மிளகு, பாக்கு, தேக்கு, காபி ன்னு பல பயிருங்க இருந்தாலும், குறைஞ்ச காலத்துல நிறைஞ்ச இலாபம் தருவது சின்ன வெங்காயத்துக்கு ஈடான பயிரு வேற ஒண்ணும் இல்லை!

மத்த காய்கறி பயிருங்கள பொறுத்த வரைக்கும் அறுவடை பண்ணின உடனே வித்திடணும். ஆனா, சின்ன வெங்காயத்த வச்சிருந்து விற்கலாம். அழுகிப்போயிருங்கற கவல கிடையாது. 15 நாளு, 20 நாளுகூட வச்சிருந்து விற்கலாம்.

“விதைச்ச 55 நாளுல இந்த சின்னவெங்காயத்துல பணம் பாத்துடலாம். சின்னவெங்காயத்த மே மாசத்துல இருந்து ஆகஸ்ட்டுக்குள்ள பயிர் பண்ணினால் 55 நாளுல அறுவடை பண்ணிடலாம்.

மேல தாண்டுச்சுன்னா பங்குனிப்பச்சை விழுந்து இழுத்துக்கிட்டு கிடக்கும். 55 நாளுக்கு மேல தாண்டி அறுவடைக்கு 65 நாள் வரை கூட ஆயிடும்.

வெயில் அடிச்சா சீக்கிரம் அறுவடை. மழை பெஞ்சதுன்னா கொஞ்சம் தாமதமாக அறுவடைக்கு வரும். 1 1/2 ஏக்கர்ல வெங்காயம் பயிர் செய்தால் வெங்காயத்துக்கு செய்த செலவுல விதை வெங்காயத்துக்குத்தான் அதிக செலவு.

ஒரு ஏக்கர் விதைக்க 700 கிலோ சின்ன வெங்காயம் தேவைப்பட்டது. விதை வெங்காயம் கிலோ 27 ரூபாய்க்கு வாங்கினால். மொத்தமா 1 1/2 ஏக்கருக்கு 1050 கிலோ விதை சின்னவெங்காயம் தேவைப்பட்டது. அதுக்கே 28000 ரூபாய் செலவாகும்.

வெங்காயத்துல நல்ல மகசூல் எடுக்க உரத்த ஏத்திக் கொடுக்கணும். இது குறுகிய காலப் பயிருங்கறதுனால 20:20 மிகச் சிறந்த உரம். ஏக்கருக்கு 2 மூட்டை போடலாம். பல்லு பிரியும் போது “ஜிப்ரலிக் ஆசிட்” பயிர் ஊக்கியை 2 டேங்குக்கு 1 கிராம் என்ற கணக்குல ஸ்பிரே பண்ணனும்.

களைய கட்டுப்படுத்த “ஆக்ஸிகோல்டு” (Oxyflurofen) ஒரு டேங்குக்கு 30 மி.லி கணக்குல வச்சி தெளிச்சதுனால விதைச்ச 30 நாள் வரைக்கும் களை வராது. ஆனால் இந்தக் களைக் கொல்லி படருகிற இலைகளை மட்டும்தான் கட்டுப்படுத்தும். அருகு, கோரையை சீண்டாது. இதை நட்ட 3 வது நாளுல அடிக்கணும். 35 வது நாள்ல ஒரு கை களையும் எடுக்கலாம்.

சின்னவெங்காயத்துக்கு ரொம்ப பவரான களைக் கொல்லிய அடிக்கக் கூடாது. அடிச்சா வெங்காயம் செத்துடும். மொத்தத்துல 1 1/2 ஏக்கர் விவசாயம் பண்ணதுல 5880 கிலோ மகசூல் கிடைக்கும்.

சராசரியா கிலோ ரூபாய் 30ன்னு விற்றால்கூட, 176,000 ரூபாய் வருமானம் வரும். அதுல செலவு ரூபாய் 55,000 கழித்தால். 2 மாசத்துல 1 1/2 ஏக்கர்ல 1 1/4 இலட்சம் லாபம் கொடுக்கிற ஒரே பயிர் சின்னவெங்காயம் தான்”.