காய்கறி விதைகளை விதைக்கும் முன் விதைநேர்த்தி செய்வது அவசியம். ஏன்?
காய்கறி விதைகளை விதைக்கும் முன்னர் விதைநேர்த்தி செய்வது அவசியம். குறிப்பாக தக்காளி, கத்தரி, மிளகாய் பயிரிட உள்ளவர்கள் விதை நேர்த்தி செய்வது அவசியமாகும்.
காய்கறி பயிர்களை வேரழுகல்நோய், வாடல் நோய், நாற்றழுகல் நோய், இலைப்புள்ளி நோய் என பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. அவை விதைகள் மூலமாகவும் பரவுகின்றன.
பூசண வித்துக்கள் விதையின் மேல் மற்றும் உட்புறம் தங்கியிருக்கின்றன. விதை முளைக்கும்போது பூசண வித்துகளும் முளைத்து சாதகமான சூழ்நிலையில் நோயினை உண்டாக்கி சேதம் விளைவிக்கின்றன.
இதனை தடுக்க காய்கறி விதைகளை விதைப்பதற்கு சற்று முன்னர் ஒரு கிலோ விதைக்கு பத்து கிராம் வீதம் சூடோமோனாஸ் ஃபுளுரசன்ஸ் என்ற உயிரியல் காரணி கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
விதை நேர்த்தி செய்வதால் நாற்றங்காலில் சாதகமான சூழ்நிலைகளில் தாக்கும் நாற்றழுகல் நோயினை தடுக்க இயலும்.
சூடோமோனாஸ் ஃபுளு ரசன்ஸ் என்ற உயிரியல் பூசணக்கொல்லி ஒரு கிலோ விலை ரூபாய் எழுப்பத்தைந்து
ஆடிப்பட்ட காய்கறி சாகுபடியாளர்கள் சூடோமோனாஸ் ஃபுளுரசன்ஸ் உயிரியல் பூசணக்கொல்லியை பயன் படுத்தவும்.