சுழற்சி முறை பயிர் சாகுபடி; எந்தெந்த பயிருக்கு பின் எந்தெந்த பயிர் சாகுபடி செய்யணும்?

rotational cultivation method
rotational cultivation method


 

விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான பயிரை சாகுபடி செய்வதைத் தவிர்த்து, சுழற்சி முறையில் பயிர்களைத் தேர்வு செய்து சாகுபடி செய்தால் கூடுதல் மகசூலும், அதிக லாபமும் பெறலாம்.

பயறு வகைகளுக்குப் பிறகு:

பயறு வகைகள் பயிரிடும் விவசாயிகள் அதன் பிறகு பயறு அல்லாது வேறு பயிர்களை தேர்வு செய்ய வேண்டும் கோதுமை, மக்காச் சோளம், முதலில் செய்த பயிர் அல்லது தானியங்களை ஊடுபயிராக பயிரிடலாம்.

சில வகைப் பயிர்கள் மண்ணில் உள்ள சத்துகள் அனைத்தையும் உறஞ்சிவிடும் தன்மை கொண்டவை. எள், கடலை ஆகியவை இத்தகையத் தன்மை கொண்டவை. எனவே, இத்தகையப் பயிர்களைப் பயிரிட்ட பிறகு பயறு வகைகளைப் பயிரிட்டால் சத்துக்களை மண்ணில் நிலை நிறுத்தும்.

இலைகள் மண்ணில் உதிர்வதற்கு:

அவ்வப்போது இலைகள் மண்ணில் உதிரும் வண்ணம் உள்ள செடிகளையும் பயிரிடலாம்.

 


பருத்தி, நெல், கோதுமை, பயறு வகைகள் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

தானியப் பயிர்களுக்குப் பிறகு:

மானாவாரியாகவோ, இறவைப் பயிராகவோ தானியங்களை பயிரிடும் விவசாயிகள், தானிய விளைச்சலுக்குப் பிறகு பசுந்தாள் உரத் தாவரங்களைப் பயிரிடலாம். சனப்பை, நெல், துவரம் பருப்பு, பச்சைப் பயறு, மக்காச்சோளம் ஆகியவற்றைத் தேர்வு செய்யலாம். நல்ல அதிக ஊட்டச்சத்து தேவையுடைய பயிர்களுக்குப் பிறகு குறைந்த ஊட்டச்சத்து தேவையுடைய பயிர்களைப் பயிரிட வேண்டியது அவசியம். மக்காச் சோளம்,  உளுந்து, பூசணி வகைகளை சாகுபடி செய்யலாம்.

பருவம் சார்ந்தவை:

பருவம் சார்ந்த பயிர்களை பயிரிட்ட பிறகு ஓராண்டுக்கு தாவரங்களைப் பயிரிட வேண்டும். நேப்பியர், கரும்பு பயிரிட்ட பிறகு நிலக்கடலை, தட்டைப் பயறு பயிரிடலாம்.

காய்கறி சாகுபடி செய்த பிறகு:

காய்கறி வகைகளை சாகுபடி செய்த பிறகு தீவனப் பயிர்களைப் பயிரிடலாம். சோளம், தட்டைப் பயறு, உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், வெங்காயம் என சுழற்சி முறையில் பயிர் செய்தால் கூடுதல் வருவாய் கிடைக்கும். விதைத் தவாரங்களுக்குப் பிறகு வேர்த் தாவரங்களைப் பயிரிடலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios