பலவித பயிர்களை காக்க ஒரே ஒரு இயற்கை பூச்சிவிரட்டி…

Only natural INSECTICIDES protect various crops
only natural-insecticides-protect-various-crops


பண்டைக் காலத்திலிருந்து வேப்பெண்ணெய் சிறந்த பூச்சி விரட்டியாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

வேப்பெண்ணெய், கோமியம் மற்றும் கற்பூரம் கலந்த பூச்சி மருந்து ஒன்றை தயார் செய்து விவசாயத்தில் பயன்படுத்தலாம்.

எப்படி தயாரிப்பது?

இந்த பூச்சி விரட்டிக் கரைசல் வேப்பெண்ணெய் சார்ந்தது என்பதால் நீரில் கரையாத வேப்பெண்ணெயை முதலாவது கரை நிலைக்குக் கொண்டு வர வேண்டும். அதற்காக காதி சோப். அல்லது தலைக்குப் போடும் ஷேம்பை பயன்படுத்தலாம்.

அதேபோல் கற்பூரம் நீரில் கரையாது என்பதால் அதைக் கரைக்க எத்தனால் (கரும்புக் கழிவுப் பாகில் இருந்து தயாரிப்பது) உபயோகப்படுத்தலாம்.

10 முதல் 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட மருந்து தெளிப்பானுக்கு 100 மில்லி வேப்பெண்ணெய், 1 லிட்டர் கோமியம், 10 வில்லை கற்பூரம் ஆகியவை தேவைப்படுகிறது.

இக்கரைசலை நெற்பயிரில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்த உபயோகப்படுத்தியதில் புகையான் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

இந்த கரைசலை கீழ்கண்ட பயிர்களுக்கு அடித்து நீங்களும் பயன்பெறலாம்…

1.முக்கியமாக கத்தரிப் பயிரில் தண்டு துளைப்பான், காய்துளைப்பான் ஆகியவற்றையும் மல்பெரி, பப்பாளியில் மாவுப்பூச்சியையும் கட்டுப்படுத்து தன்மையுடையது.

2. நெல்பயிரில் குருத்துப் பூச்சி, இலை சுருட்டுப் புச்சி ஆகியவை கட்டுப்படும்.

3. பருத்திப் பயிரில் அனைத்து வகைப் பூச்சிகளையும் கட்டுப்படுத்த பயன்படுத்தலாம்.

4. வெங்காயத்தில் நுனிக் கருகல் நோய் ஒரு தடவை தெளித்தால் அறுவடை வரை வராது.

5. முருங்கைப் பயிரில் அனைத்துப் பூச்சிகளையும் கட்டுப்படுத்தவல்லது.

6. மா மரத்தில் அதிகப்படியான பூக்கள் உருவாகும். சில வகை மரங்களில் வருடத்தில் இரண்டு முறை காய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.

7. வெண்டை மற்றும் உளுந்து பயிர்களில் மஞ்சள் வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துகிறது.

8. எள் பயிரில் அதிகமான வளர்ச்சி மற்றும் அதிகமான பூக்கள், நீளமான காய்கள் தோன்றும்.

9. வேர்க்கடலைப் பயிரில் ஆரம்பம் முதல் தெளித்தால் பூச்சிகள் தாக்குதல் இருக்காது.

10. எலுமிச்சை மரங்களில் அனைத்து பூச்சிகளையும் கட்டுப்படுத்துவதுடன் அதிகமாக பூக்கள் எடுத்துவருடம் முலுவதும் தொடர்ந்து காய்க்கும்.

11. மல்லிகைச் செடிகளில் பயன்படுத்தும்போது, இதனுடன் 100 மி.லி மீன் அமினோ அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். பூக்கள் அதிகமாகும்.

12. அனைத்துப் பூச்செடிகளிலும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தி வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios