குஞ்சு பொரிப்பகத்தின் முக்கிய நான்கு செயல்பாடுகள் ஒரு அலசல்...
குஞ்சு பொரிப்பகத்தின் முக்கிய நான்கு செயல்பாடுகள்:
1.. கருவுற்ற முட்டைகளைப் பெறுதல்
கருவுற்ற முட்டைகளைக் குஞ்சு பொரிப்பகங்கள் கீழ்க்கண்டவர்களிடமிருந்து பெறுகின்றன:
அ. தங்களுடைய சொந்த இனப்பெருக்கம் செய்யும் கோழிகளிலிருந்து
ஆ. மற்ற இனப்பெருக்கக் கோழிப் பண்ணைகளிலிருந்து
இ. மற்ற குஞ்சு பொரிப்பகங்களிலிருந்து
2.. கருவுற்ற முட்டைகளை அடைகாப்பானில் உள்ள அட்டைகளில் அடுக்குதல்
முட்டைகளை இனப்பெருக்கக் கோழிகளிடமிருந்து பெற்ற உடனே, அட்டைகளில் அடுக்க வேண்டும்.
3.. கருவுற்ற முட்டைகளைப் புகைமூட்டம் செய்தல்
முட்டைகளை அட்டைகளில் அடுக்கிய பின்பு, புகை மூட்டுவதற்காக புகை மூட்டும் அறையில் வைக்க வேண்டும். மூன்று மடங்கு திறனுடைய ஃபார்மால்டிஹைடு கரைசலின் மூலம் 20 நிமிடத்திற்கு புகை மூட்டுவதால் முட்டையின் ஓட்டிலுள்ள 97.5 முதல் 99.5% கிருமிகள் கொல்லப்பட்டு விடும்.
ஒரு மடங்கு திறன் எனப்படுவது ஒரு கன அடிக்கு 20 கிராம் பொட்டாசியம் பர்மாங்கனேட் தூளை 40 மிலி ஃபார்மால்டிஹடு கரைசலில் கலந்து உபயோகப்படுத்துவதாகும் (மூன்று மடங்கு என்பது 60 கிராம் பொட்டாசியம் பர்மாங்கனேட்டுடன் 120 மிலி ஃபார்மால்டிஹடு கரைசலுடன் கலந்து 100 கன அடிக்கு உபயோகப்படுத்துவதாகும்.
4.. முட்டைகளைக் குளிர் பதனம் செய்து சேமித்தல்
முட்டைகளைப் பெற்றவுடன் உடனடியாக அடை வைக்கவில்லை எனில் அவற்றை 65 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், 75% ஈரப்பதமும் உள்ள குளிர் பதன அறையில் வைத்து சேமிக்கலாம்.