கம்பு சாகுபடி; வளரியல்பு முதல் சாகுபடிக்கு ஏற்ற இரகங்கள் வரை ஒரு அலசல்…

Millet cultivation Growing up a variety of varieties suitable for first cultivation
Millet cultivation; Growing up a variety of varieties suitable for first cultivation


வளரியல்பு

ஆண்டுதோறும் வளரக்கூடியவை.

பூக்கும் பருவம்:

மலர்கள் செப்டம்பர் முதல் அக்டோபர் வரை பூக்கும்.

காய்க்கும் பருவம்:

கனிகள் அக்டோபர் முதல் நவம்பர் வரை காய்க்கும்.

பரவியிருக்குமிடம் : பயிரிடக்கூடியவை. வட மற்றும் கிழக்கு சீனா போன்ற நாடுகளில் காணப்படும்.

கழைகள்

கழைகள் திடமானது, 3 மீட்டர் உயரமானது, நெருக்கமானது.
கணுக்கள் மொசுமொசுப்பானது, மஞ்சரி கீழ்ப்புறத்தில் இருக்கும்.

இலைகள்

இலை உறைகள் தளர்வானது, வழவழப்பானது; ஏறத்தாழ 20-100X2-5 செ.மீ நீளமானது, இரு மேற்பரப்புகள் மற்றும் விளிம்புகள் சுணையுடையது; அடிப்பகுதி இதய வடிவமானது; இலை உறைச்செதில் சுமார் 2-3 மி.மீ நீளமுடையது.

மஞ்சரி

நேரானது முதல் அகலமானது, நீள்வட்ட வடிவமானது, நெருக்கமானது, ஏறக்குறைய 40-50X1.5-2.5 செ.மீ நீளமுடையது; அச்சு நெருக்கமானது. மொசுமொசுப்பானது, பூவடிச் செதிலின் மேலுறை உதிர்ந்து (விழுந்து) விடாமல் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கும்,

1-9 பூங்கிளைகள் சூழ்ந்திருக்கும், கூடை வடிவுடைய காம்பு சுணையானது, சுமார் 1-25 மி.மீ நீளமுடையது; பூங்கிளைகளில் ஊசி, போன்ற உரோமங்கள் வழக்கமாகக் குறுகியவை, வழுவழுப்பானது, நெருக்கமானது. இறகு போன்றது.

மலர்கள் : சிறு காம்பிலிகள் தலைகீழ் முட்டை வடிவமானது, சுமார் 3.5-4.5 மி.மீ நீளமானது; கீழ்ப்பகுதி உமிச்செதில் நுண்ணியவை, சுமார் 1 மி.மீ. நீளமானது; மேல்மட்ட உமிச்செதில் சுமார் 1.5-2 மி.மீ நீளமுடையது, 3-நரம்புகள்; ஆண் மலர் கீழ் உமி சுமார் 2.5 மி.மீ நீளமுடையது.

5-நரம்புகள், விளிம்புகள் சவ்வு போன்றவை மற்றும் விளிம்பில் முடிகளைக் கொண்டது, மேல் உமி நுண் தளிர் சுணை மற்றும் மெல்லிய தாள் போன்றது; மேல்மட்ட கீழ் உமி 5-7 நரம்புகள், மெல்லிய தாள் போன்றது, நுண் தளிர் சுணை, விளிம்பில் முடிகளைக் கொண்டது,

முனை நுனி மழுங்கியது; மகரந்தப்பைகளுடன் ஒரு குறுகிய முடிகள் முனையில் கொண்டது.

இரகங்கள்

உள்ளுறைக் கம்பு, கீழ்த்திசைக் கம்பு, சிறுமலர்காம்பு கம்பு, சுருள்முடிக் கம்பு, நரம்புக் கம்பு, நரிவால் கம்பு, நாட்டுக் கம்பு, பலவீனக் கம்பு, பிரிந்த கம்பு, முன்ஜா கம்பு…

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios