மாலாடு, செம்மறி, குறும்பை ஆடுகளுக்கு கிராக்கி அதிகம். ஏன்?
தென் மாவட்டங்களில், செம்மறி, மாலாடுகள் அதிகளவில் வளர்க்கப்படுகிறது.
கால்நடை மேய்ச்சல் நிலம் இல்லாததால், ஆடு வளர்ப்பவர்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று, நீர் நிலை மற்றும் தரிசு நிலங்களில், ஆடுகளை மேய்த்து வருகின்றனர்.
மேய்ச்சல் நிலம், ஏரி, ஆறு, நீரோடை மற்றும் தரிசு நிலங்கள் அதிகளவில் இருக்கும் பகுதிகளில் செம்மறி ஆடு வளர்ப்பவர்கள் முகாமிட்டு, ஆடு மேய்த்து வருகின்றனர்.
இந்த ஆடுகளின் கழிவுகள், விளை நிலங்களில், இயற்கை உரமாக பயன்படுத்துவதன் மூலம், நல்ல மகசூல் கிடைத்து வருகிறது.
"செம்மறி, குறும்பை, மாலாடுகளின் கழிவுகள், விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அவ்வாறு, மேய்ச்சலுக்கு கொண்டு வரும் செம்மறி ஆடுகளை, பயிர் செய்யும் விளை நிலங்களில், “கிடை’ அமைக்க வாடகை கொடுக்கின்றனர். அவ்வாறு, இரவு நேரத்தில், செம்மறி ஆடுகள், கிடைகளுக்குள் உமிழும் சிறுநீர், புழுக்கைகள் போன்ற கழிவுகள், மகத்துவம் வாய்ந்த உரமாக, விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்."
இதனால், மாலாடு, செம்மறி, குறும்பை ஆடுகளுக்கு, ஆத்தூர், தலைவாசல் பகுதி விவசாயிகள் மத்தியில், பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.