கோழிப் பண்ணைக் கழிவுகளை இந்த முறையில் எளிதில் உரமாக்கலாம்...

make fertilisers from chicken waste
make fertilisers from chicken waste


 

கோழிப் பண்ணைக் கழிவுகளை உரமாக்குதல்...

** கோழிப்பண்ணைத் தொழில் உலகில் மிகவும் வேகமாகவும், அதிகமாகவும் வளர்ந்து வரும் தொழில்களில் ஒன்றாகும். இந்தியாவில் 3.30 மில்லியன் டன் கோழிக் கழிவு ஒரு வருடத்திற்கு உற்பத்தியாகிறது. 

** கோழிவளர்ப்பு தொழில் நுட்பத்தின் மூலம் பல மாநிலங்களில் உள்ளூர் விவசாய பொருளாதாரம் உயருகிறது. 

** கோழிப் பண்ணைத் தொழிலானது மிகவும் லாபகரமாகவும் வெற்றிகரமாகவும் இருந்த போதிலும், இப்பண்ணைகளிலிருந்து வரும் கழிவுகள் சுற்றுப்புறச் சூழலை பாதிப்படையச் செய்கின்றன. 

** விவசாயக் கண்ணோட்டத்தில் கோழிப் பண்ணைக் கழிவிலிருந்து வெளியேறும் நைட்ரேட் நைட்ரஜன் நிலத்தடி நீரை மாசு அடையச் செய்வதில் பெரும்பங்கு வகிக்கிறது. 

** கோழிக் கழிவை முறையற்று சேமித்து வைப்பதன் மூலம் அவற்றிலுள்ள கனிம உலோகங்கள் நீர் நிலைகளை மாசுபடுத்துகின்றன.

** கோழி எரு மக்கும் பொழுது வெளியாகும் அம்மோனியா சுற்றுப்புறச் சூழல் மாசுபடுதலை அதிகரிப்பது மட்டுமல்லாமல் எருவின் உர மதிப்பையும் குறைக்கிறது. ஏனென்றால் கோழிப்பண்ணைக் கழிவில் பொதுவாக தழைச்சத்து அதிகமாகவும், கரிமம் - தழைச்சத்தின் விகிதம் குறைவாகவும் உள்ளது. 

** கோழிப்பண்ணைக் கழிவில் 60% தழைச்சத்தானது யூரிக் அமிலம் மற்றும் யூரியாவாக உள்ளது. இது நீராற் பகுத்தல் மூலம் அம்மோனியாவாயுமாக மாறி வெளியேறுவதால் தழைச்சத்து இழப்பு ஏற்படுகிறது. 

** கோழி எருவில் இருந்து அம்மோனியா ஆவியாதலை பல்வேறு வழிகளில் குறைக்கலாம்.  

** கோழி எருவினை, அதிகக் கரிமப் பொருள் கலந்த அங்கக கழிவுப் பொருட்களுடன் மக்கச் செய்வதினால், அம்மோனியா ஆவியாதலை தற்காலிகமாக நிலைப்படுத்த முடியும். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios