இலுப்பை சாகுபடி செய்வது எப்படி? வளர்ச்சி முதல் நடவுமுறைகள் வரை…

Mahua how to cultivate? Until the development of the first natavumuraikal
mahua how-to-cultivate-until-the-development-of-the-fir


வளர்ச்சி

இந்தியாவை தாயகமாகக் கொண்ட இம்மரம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் குறிப்பாக தென்னிந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பாக வளர்கிறது.

பருவம்

வருட மழைப்பொழிவு 800 – மி.மீ முதல் 1800 மி.மீ வரை உள்ள பகுதிகளில் இம்மரங்கள் செழிப்பாக வளர்கின்றன.

மண்:

மணல் கலந்த மண்ணில் சிறப்பாக வளரும் வண்டல் மண்ணிலும் சிறப்பாக வளர்கிறது.

நாற்றங்கால் தொழில்நுட்பங்கள்:

ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பழுத்த பழங்கள் உள்ள கிளைகளை உறுக்குவதன் மூலம் சேகரிக்கப்படுகின்றன. இப்பழங்கள் தரைகளில் உரசப்பட்டு நீரில் உளற வைக்கப்பட்டு விதையுறைகளிலிருந்து விதைகள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

நாற்றங்காலில் பாத்திகள் அல்லது மண்,எரு மற்றும் மணல் கலந்த நெகிழ்தாள் பைகளில் நட்டு நீர் தெளிக்கப்படுகிறது. இவ்விதைகள் நாற்றங்காலில் 30 செ.மீX 15 செ.மீ. இடைவெளிகளில் 1.5 முதல் 2.5 செ.மீ ஆழத்தில் ஊன்றப்படுகின்றன.

நட்டபின் 15 நாட்களுக்குப் பிறகே முளைக்கும். இந்நாற்றுகள் ஒராண்டு வரை நேரடியான வெயில் படாமல் பாதுகாக்கப்படுகின்றன.

நடவுமுறைகள்:

நாற்றங்காலில் உள்ள ஒராண்டு நிரம்பிய நாற்றுகள் வயல்களில் மழைக்காலங்களில் நடவு செய்யப்படுகின்றன. வயல் நடவிற்கு 0.5மீ அகலமும் 0.5மீ நீளமும் உள்ள குழிகள் தோண்டப்பட்டு மே மற்றும் ஜீன் மாதங்களில் நடப்படுகிறது.

நடவின்பொழுது ஆணிவேரை அசைக்காமல் கவனத்துடன் நடவு செய்ய வேண்டும்.பிறகு நீர் தெளிக்கப்படுகிறது. மூன்று மாத இடைவெளிகளில் களைநீக்கம் செய்து செடியைச் சுற்றிலும் லேசாகக் கொத்தி கிளறி விட வேண்டும்.

இரண்டு ஆண்டுகள் வரை களை நீக்கம் செய்வது அவசியம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios