விவசாயத்தில் இந்த உத்திகளை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்! ரொம்ப உதவியாக இருக்கும்...
1. பயிறு வகைகள் பயிரிட்ட பின்பு பயறு அல்லாத வேறு ஏதேனும் பயிர்களைப் பயிர் செய்தல் வேண்டும். எ.காட்டாக. பச்சைப் பயிறு – கோதுமை / மக்காச் சோளம். முதலில் செய்த பயிர் வகை அல்லது தானியங்கள் போன்ற வேறு ஒன்றுடன் ஊடு பயிராக பயிர் செய்திருந்தால் மீண்டும் வேறு வகைப் பயிருடன் சேர்த்துப் பயறு வகைகளைப் பயிர் செய்யலாம்.
2. சில பயிர்கள் மண்ணிலுள்ள சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. எ.கா: எள், கடலை. எனவே இப்பயிர்களை பயிரிட்டபின் பயறு வகைகளைப் பயிரிட்டால் அவை சத்துக்களை மண்ணில் நிலைநிறுத்துகின்றன.
3. அவ்வப்போது இலைகள் மண்ணில் உதிரும் வண்ணம் உள்ள செடிகளையும் பின்பற்றலாம். எ.கா: பயிறு / பருத்தி – கோதுமை / நெல்
4. தானியப் பயிருகளுக்குப் பிறகு பசுந்தாள் உரத்தாவரங்களைப் பயிரிடலாம். எ.கா: சனப்பை – நெல், துவரம் பருப்பு, பச்சைப் பயிறு – கோதுமை, மக்காச் சோளம்.
5. நல்ல அதிக ஊட்டச்சத்து தேவை மிக்க பயிறுக்குப்பின், குறைந்த ஊட்டச்சத்து தேவைமிக்க பயிர்களைப் பயிரிடுதல் வேண்டும். எ.கா: மக்காச்சோளம், உளுந்து, பூசணி வகைகள்
6. பருவம் சார்ந்த பயிர்கள் பயிரிட்ட பின் ஓராண்டுத் தாவரங்களைப் பயிர் செய்யலாம். எ.கா: நேப்பியர், கரும்பு – நிலக்கடலை, தட்டைப்பயிறு
7. வேளாண் / காய்கறிகளை பயிர்களுக்குப் பின் தீவனப் பயிர்களைப் பயிரிடலாம். எ.கா: சோளம் + தட்டைப் பயிறு – கோதுமை / உருளைக் கிழங்கு / முட்டைக்கோஸ் / வெங்காயம்
8. சில விதைத் தாவரங்களைத் தொடர்ந்து தண்டு அல்லது வேர்த் தாவரங்களை ஊன்றலாம்.
9. மறுதாம்புப் பயிர்களுக்குப் பின் ஆழமான வேர்கள் செல்லக்கூடிய பயிர்களைப் பயிர் செய்யலாம்.
10. சுத்தப்படுத்தும் பயிர்களைத் தொடர்ந்து நாற்றங்கால் பயிர்களை நடலாம். எ.கா: உருளைக் கிழங்கு / கொலகேசியா / மஞ்சள் / பீட்ரூட் / கேரட் – நெல் நாற்றாங்கால் / வெங்காய நாற்றாங்கால் / புகையிலை நாற்றாங்கால் / காய்கறிப் பயிர்களின் நாற்றாங்கால்.