Its for the farmers! Two best natural pesticides

1.. பழக்காடி கரைசல்

தேவையான பொருட்கள்:

சாணம்-20 கிலோ,

கெட்டுப்போன பழங்களின் கூழ் – 5 முதல் 10 கிலோ

தொல்லுயிர் கரைசல்-50 கிலோ,

தண்ணீர்-50 லிட்டர்,

ஜீவாமிர்தம் -5-10 லிட்டர்.

தே மோர் (அ) அரப்புமோர் -5-10 லிட்டர்.

இவை அனைத்தும் கலந்து 5 முதல் 7 நாட்கள் நொதிக்கவிட வேண்டும். இதன் மூலம் நுண்ணுயிர்கள் பலமடங்கு பெருகும். மாதம் ஒருமுறை வீதம் 5 முறை பாசன நீரில் பழங்காடி கரைசலை சீராகக் கலந்து செல்லும் வகையில் பயன் படுத்த வேண்டும். இக்கரைசல் ஒரு மிகச்சிறந்த பயிர் ஊக்கியாகும்.

2.. வேம்பு புங்கன் கரைசல் :

தேவையான பொருட்கள் :-

வேப்பெண்ணை ஒரு லிட்டர்

புங்கன் எண்ணை ஒரு லிட்டர்

கோமியம் (பழையது) பத்து லிட்டர்

காதி சோப்பு கரைசல் அரை லிட்டர்

இவை அனைத்தையும் கலந்து வைத்து ஒருநாள் கழித்து உபயோகிக்கலாம். இவை ஒரு 2.5 ஏக்கர் அளவுக்கானது. இது எல்லா வகை பயிர்களுக்கும் மிகச்சிறந்த பூச்சி விரட்டி.