Asianet News TamilAsianet News Tamil

இலைச்சுருட்டு புழுவை கட்டுப்படுத்த இவற்றை செய்தாலே போதும்...

Its enough to control the leaflet worm ...
Its enough to control the leaflet worm ...
Author
First Published Apr 17, 2018, 1:10 PM IST


இலைச்சுருட்டு புழுவை கட்டுப்படுத்த

சிறியா நங்கை கஷாயம் 3 முதல் 5%,பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் கரைசல் அல்லது  5 சதம் வேப்ப விதைக் கரைசலைத் தெளிக்க கட்டுப்படுத்தலாம்.

வேப்ப இலை கொத்துகளை வயலில் ஆங்காங்கே வைக்க வேண்டும். வேப்ப எண்ணெய் 300 மில்லி மண்ணெண்ணெய் 250 மில்லி மற்றும் காதி சோப் 50 கிராம் ஆகியவற்றை 160 லிட்டர் தண்ணீரில் நன்கு கலந்து காலை வேளையில் இலைப் பிணைப்புகளில் நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.

வேப்பங்கொட்டைத் தூளை 300_to_500 கிராம், 300 மில்லி மண்ணென்ணையில் 24 மணி நேரத்திற்கு ஊறவைத்து அந்த வடிநீரை 150 கிராம் காதி சோப்புடன் கலந்து காலை வேளையில் தெளிக்க வேண்டும்.

10 கிலோ வேப்ப இலையை விழுது போல் அரைத்து அதனை 1 லிட்டர் நீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதை 30நிமிடங்கள் கொதிக்க விடவேண்டும். இரவு முழுவதும் ஆற வைத்து 200 லிட்டர் நீருடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

இலந்தை மரக்கிளையால் பிணைக்கப்பட்ட இலைகளை உரசி,மறைந்திருக்கும் புழுக்களை முட்களால் குத்தி அழிக்கலாம். இது போல சீமைக்கருவேல கிளைகளையும் பயன்படுத்தலாம்.

4 சதம் வேப்ப எண்ணெய் தெளிக்கலாம். சோற்றுக் கற்றழை சாறை தெளிக்கலாம். சாம்பல் தூவலாம். 300 மில்லி வேப்ப எண்ணெய்,300 மில்லி புங்கம் எண்ணெய் 150 கிராம் காதி சோப்பு ஆகியவற்றை 13 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

விளக்கு பொறிகளை வைத்து அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios