கோழிகளை வளர்த்தால் மட்டும் போதாது! பராமரிக்கவும் செய்யணும்; அப்போதுதான் நோய் தாக்காது...

It is not enough to grow chickens! To maintain and maintain Then the disease does not hit ...
It is not enough to grow chickens! To maintain and maintain Then the disease does not hit ...


கோழிகளை பராமரிக்கும் முறை...

** தோட்டத்தில் கோழிகளை வளர்க்கும் போது நாம் கொஞ்சம் கவனத்துடன் இருந்தால் தொற்று நோய்களைத் தவிர்த்து கொள்ள முடியும்.

** வெளியில் சென்று வந்ததும் உடனே பண்ணைக்குள் செல்லக் கூடாது.

** பார்க்க வருபவர்களையும் வாங்க வருபவர்களையும் தனி இடத்தில் நிறுத்தி நாம்தான் பண்ணைக்குள் சென்று காட்ட வேண்டிய கோழிகளைக் கொண்டு வந்து காட்ட வேண்டும்.

** இறந்த கோழிகளையும் நாய் அல்லது காக்கை கொண்டு வந்து போடும் கோழி உடல்களையும் உடனே ஃபர்மலின் தெளித்துப் புதைத்து விட வேண்டும்.

** வேறு இடத்தில் இருந்து கொண்டு வரும் குஞ்சுகளை உடனே நம் பண்ணைக்குள் விடாமல் மூன்று நாட்களுக்குத் தனி இடத்தில் வைத்து துளசித் தேனீர் தந்து அதன் பிறகு உள்ளே விட வேண்டும்.

** தினமும் காலையில் கோழிகளைத் திறந்து விட்டு முதல் தீனி தரும் போதும், மேய விடும் போதும், மாலையில் அடைக்கும் போதும் அருகில் சற்று நின்று ஒவ்வொரு கோழியும் தீனி எடுக்கும் விதத்தையும் அளவையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

** அவற்றின் எச்சங்களைக் கவனிக்க வேண்டும். அவை நன்றாகத் திரண்டு பிழுக்கை வடிவில் இருக்க வேண்டும். இளகி இருந்தாலோ தண்ணீராக இருந்தாலோ, உடனே அந்தக் கோழிகளைத் தனிப் படுத்தி அவற்றிற்கு வாய் வழியாகக் கெட்டியான மோர் தர வேண்டும்.

** மறுநாள் முழுவதும் அனைத்துக் கோழிகளுக்கும் தண்ணீருக்குப் பதிலாகக் கெட்டி மோர் மட்டுமே தர வேண்டும்.

** கோடையிலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கோழிகளுக்கு மோர் தரவேண்டும்.

** இந்த முறையில் கழிச்சல் நன்றாகக் கட்டுப் படுகிறது. கழிச்சல் கடுமையாக இருந்தால் இரசாயன மருந்துகளும் தேவைப்படும்.

** கடுமையான கழிச்சல் வந்தால் பெரும்பாலான கோழிகள் இறந்து விடும். இதனால் நூறு கோழிகள் இருக்கும் பண்ணையில் கூட வெள்ளைக் கழிச்சலோ, இரத்தக் கழிசலோ வராது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios