Insect pests and control methods

1.. தண்டுத் துளைப்பான் :

இவை தண்டு, கிழங்குப் பகுதியினைத் துளைத்து செல்வதால் நடுக்குருத்து காய்ந்துவிடும். இதனைக் கட்டுப்படுத்த எண்டோசல்பான் 0.1 சதம் தெளிக்கவேண்டும்.

தண்டுத் துளைப்பான் விரும்பி உண்ணும் ஆமணக்கு, மாதுளை, பலா, இஞ்சி போன்றவை மஞ்சள் தோட்டத்திற்கு அருகில் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

2.. இலைப்பேன் :

இலைகளில் சாறை உறிஞ்சி பயிர்களை வாடச்செய்யும்.

மெட்டாசிஸ்டாக்ஸ் மற்றும் டைமெத்ரான் 750 மில்லி , தெளிப்பதன் மூலம் இலைப்பேனைக் கட்டுப்படுத்தலாம்.

3.. செதில் பூச்சி :

இவை மஞ்சளின் கிழங்குப் பகுதியினைத் தாக்கிச் சேதம் விளைவிக்கும்.இதனால் கிழங்குகள் சுருங்கி, பின் காய்ந்துவிடும்.

இதனைக் கட்டுப்படுத்த பாசலோன் 1.5 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் கரைசலில் 15 நிமிடம் ஊறவைத்து, கிழங்குகளை நடவு செய்யவேண்டும்.

செதில் பூச்சியால் பாதிக்கப்படும் சேனைக்கிழங்கு போன்ற பயிர்களை மஞ்சள் பயிரிடும் நிலத்தில் பயிர் செய்யக்கூடாது.

நடவு செய்யப்பட்ட வயலில் செதில் பூச்சிகளை ஒழிக்க டைமீதோயேட் (ரோகார்) 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்த வேர்ப்பாகம் நனையும்படி ஊற்றவேண்டும்.

4.. நூற்புழு :

செம்மண் கலந்து மணற்பாங்கான இடங்களில் நூற்புழு தாக்குதல் தென்படும். இவை மஞ்சளைத் தவிர புகையிலை, மிளகாய், கத்தரி, வாழை, கானகாம்பரம் ஆகிய பயிர்களைத் தாக்கும். எனவே இவற்றை ஊடுபயிராகப் பயிரிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

செண்டு மல்லியை ஓரங்களில் பயிரிட்டால் நூற்புழுவைக் கட்டுப்படுத்தலாம். நூற்புழுத் தாக்குதலைக் குறைக்க ஒரு எக்டருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு கடைசி உழவின்போது இடவேண்டும்.

மீண்டும் யூரியா இடும்போது 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு கடைசி உழவின்போது இடவேண்டும். நட்ட 5வது மாதத்தில் ஒரு எக்டருக்கு 35 கிலோ கார்போபியூரான் குறுணையை செடியைச் சுற்றி 2-3 செ.மீ ஓரத்தில் இடவெண்டும். பின்பு மணல் கொண்டு மூடி நீர்ப்பாய்ச்ச வேண்டும்.