உங்கள் வயலில் பூச்சித் தொல்லையா? இயற்கை பூச்சிவிரட்டி செய்து நீங்களே விரட்டலாம்…

Insect in your field? You can chase yourself with natural pest ...
Insect in your field? You can chase yourself with natural pest ...


 

இயற்கை பூச்சிவிரட்டி தயாரிக்க தேவையானப் பொருட்கள்

பசுவின மூத்திரம் - 20 லிட்டர்

தோல் நீக்காத காய்ந்த வேப்பங்கொட்டை - 10 கிலோ

பெருங்காயம் - 100 கிராம்

வாய்ப் புகையிலை - 1 கிலோ

ஊமத்தம் செடிகள் - மூன்று

பச்சைமிளகாய் - அரைகிலோ

செய்முறை

வேப்பங்கொட்டையை உரலில் போட்டு உலக்கையால் நன்றாக இடித்துக் கொள்ளவும். ஊமத்தம் செடி, புகையிலை, பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடியாக கிள்ளிக் கொள்ளவும். 

இவற்றை கோமூத்திரம் உள்ள ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு, பெருங்காயத்தையும் போட்டு கலக்கி வேடு கட்டி நிழலில் வைத்து, தினமும் இருமுறை கலக்கி விடவும். ஐந்து நாட்களில் பூச்சிவிரட்டி தயாராகி விடும். சுத்தமானத் துணியில் வடிகட்டி, பத்து லிட்டர் நீருக்கு 3 லிட்டர் வீதம் கலந்து தெளிக்கவும்.

இப்படி தெளிப்பதன்மூலம் உங்கள் வயலில் இருக்கும் பூச்சித் தொல்லைகளை போக்கலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios