Asianet News TamilAsianet News Tamil

பெரிய வகையில் வருவாயைப் பெருக்கும் கறிக்கோழி வளர்ப்பு முறைகள்…

Incredible Revenue Raising Planting Methods
Incredible Revenue Raising Planting Methods
Author
First Published Jul 31, 2017, 12:10 PM IST


கறிக்கோழி

இறைச்சிக் கோழிகள் என்பவை இறைச்சித் தேவைக்காக (கறிக்காக) வளர்க்கப்படுபவை. 6-லிருந்த 8 வாரங்கள் வயதுடைய இளம் ஆண் மற்றும் பெண் கோழிகள் இறைச்சிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

பண்ணை / கொட்டகை அமைப்பு

ஒரு குஞ்சுக்கு 930 செ.மீ 2 என்ற அளவில் நல்ல காற்றோட்டமான இடவசதி தேவை. பிற கொட்டகைப் பராமரிப்புகள் முட்டைக் கோழிகளைப் போலவே பின்பற்றப்படுகின்றன.

உணவூட்டம்

இரண்டு வாரம் வரையிலும் 5 செ.மீ அளவும் 3 வது வாரத்திலிருந்து 10 செ.மீ அளவும் ஒரு குஞ்சுக்குக் கொடுக்கவேண்டும். குஞ்சு வளர வளர தீவன அளவை அதிகப்படுத்திக் கொள்ளலாம். தீவனத்தொட்டியை பாதிக்கு மேல் நிரப்பக்கூடாது. குழாய் தீவன முறையாக இருப்பின் 100 குஞ்சுகளுக்கு 12 கிலோகிராம் தீவனத்தை 3 முறையாகப் பிரித்து அளிக்கவேண்டும்.

நீர்

2×2 லிட்டர் கொள்ளளவுள்ள நீர்த்தொட்டியில் 2 வார வயதுடைய 100 குஞ்சுகளுக்கு வைக்கலாம்.

3 வார வயதுடைய குஞ்சுகளுக்கு 2 x5 லிட்டர் அளவு கொண்ட தொட்டிகளில் அளிக்கவேண்டும்.

புதிய தண்ணீரை எப்போது வழங்கணும்.

அடைகாக்கும் தருணங்களில் சரியான கவனிப்பும் நீர் ஆகாரமும் அவசியம். குஞ்சுகளின் இறப்பு எண்ணிக்கை 2 சதவிகிதத்திற்கு அதிகமாக இருந்தால் அடைகாப்புப் பராமரிப்புகள் முறையாக இருக்கின்றனவா என்றும், இறந்த குஞ்சுகளின் பிரேதப் பரிசோதனையின் முடிவுகளையும் வைத்து  இறப்புக்கான காரணத்தைக் கண்டறிந்து சரிசெய்தல் வேண்டும்.

அடைக்காப்பானில் வெப்பநிலைய வாரத்திற்கு 3 செல்சியஸ் என்ற அளவில் குறைத்துக் கொண்டே வரவேண்டும். அடைக்காப்பானை நீக்கும் போது குஞ்சுகளுக்கு 40 வாட்ஸ் ஒளி விளக்கு என்ற அளவில் வெளிச்சம் வழங்கப்படவேண்டும்.

100 கோழிகளுக்கு ஒரு நாளைக்குத் தேவையான உணவு மற்றும் நீரின் அளவை அறிந்து கொள்ள கீழ்க்கண்ட சூத்திரத்தின் மூலம் அறியலாம்.

100 கோழிகளுக்குத் தேவையான தீவனம் கிலோகிராமில் வயது நாட்களில் 14.4

நீரின் அளவு லிட்டரில் (100 கோழிகளுக்கான) வயது நாட்களில் 12.0

சாதாரண சூழ்நிலையில் மேற்கண்ட சூத்திரத்தின்படி கணக்கிட்டுக் கொள்ளலாம். பருவ நிலை (அ) தட்பவெப்ப நிலைகளைப் பொறுத்து 5-10 சதம் வரை வேறுபடலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios