இந்த காலத்தில் கருவூட்டல் செய்தால் சினைப்பிடிப்பது அதிகரிக்கும்...

In this periods pregnancy will increase in breeds
In this periods pregnancy will increase in breeds


சினைப் பிடிக்க ஏற்ற காலம்

** கருவூட்டல் முறை வெற்றி வெற அடிப்படைக் காரணம் மாடுகள் சரியான சூட்டில் சினைக்குத் தயாராக உள்ளனவா? என்று பார்த்துச் செய்வதே ஆகும். பல்வேறு ஆய்வுகள் இதில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

** டிரிம் பெக்கர் மற்றும் டேவிஸ் என்பவர்கள் நெப்ராய்காவில் 1943ல் நடத்திய சோதனைப்படி அதிகமான பசுக்களுக்கு சினை பிடிப்பது மையச் சினைப்பருவத்தில் தான், ஏனெனில் பருவம் ஆரம்பித்து 8-10 மணி நேரத்தில் தான் சூலகத்திலிருந்து சூலகம் வெளிப்பட்டு முட்டைக்குழாயை வந்தடைகிறது. 

** இதையே, காலையில் பருவத்திற்கு வரும் மாட்டை மாலையிலும் மாலையில் பருவத்திற்கு வரும் மாட்டை அடுத்த நாள் காலையிலும் கருவூட்டல் செய்வது நல்லது எனக்கூறுகிறோம். மேலும் மாட்டின் விந்தானது 18-24 மணி நேரம் கர்ப்பப்பையில் உயிருடன் இருக்கும்.

** கருமுட்டை வெளியான பின்பு 12 மணி நேரம் கழித்து கருவூட்டல் செய்தால் சினைப்பிடிப்பு விகிதம் குறைந்துவிடும். 

** 12-24 மணி நேரத்திற்குள் கருமுட்டையானது, கருவாக உருவாகும் தன்மையை இழந்து விடுகின்றது. 

** எனவே குறிப்பிட்ட காலத்தில் கருவூட்டல் செய்தால் சினைப்பிடிப்பது அதிகரிக்கும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios