Asianet News TamilAsianet News Tamil

துவரையில் விதைகளை எப்படி தேர்வு செய்வது? விதை நேர்த்தி செய்வது எப்படி?

In pigeon pea seeds to choose how to do? How to seed
in pigeon-pea-seeds-to-choose-how-to-do-how-to-seed
Author
First Published Apr 18, 2017, 12:23 PM IST


துவரை விதைகளில் காணப்படும் இந்த மூன்று விதைகளை கட்டாயம் நீக்க வேண்டும்.

1.. சுருங்கிய விதைகள்,

2.. முதிர்ச்சி அடையாத விதைகள்,

3.. பூச்சி நோய் தாக்கிய விதைகள்

இவற்றை நீக்கி நன்கு முளைப்புத்திறன் உள்ள வீரியமுள்ள சான்று பெற்ற விதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கடின விதைகளை எப்படி தேர்வு செய்வது:

1.. விதைகளை ஒருமணி நேரம் நீரில் ஊறப்போட வேண்டும்.

2.. சிலவிதைகள் நீரை உறிஞ்சாது அப்படியே காணப்படும். அவ்வாறு நீர் உறிஞ்சாத விதைகள் கடின விதைகளாகும். அவற்றை நீக்கிவிட்டு மற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும்.

கடின விதைகளை நீக்குதல்:

விதை உற்பத்தியின்போது போதுமான தண்ணீர் கிடைக்காமை, அதிக வெப்பம் போன்ற காரணங்களால் கடின விதைகள் உருவாகும் வாய்ப்புள்ளது.

இவ்விதைகள் கல்போன்று கடினமாக இருக்கும்.

பொதுவாக சேமிப்பின் போது கடினத்தன்மை நீங்கிவிடும் எனினும் கடின விதை காணப்பட்டால் அவற்றை நீக்கிவிட வேண்டும்.

அ. இரசாயன (அல்லது) பூஞ்சான விதை நேர்த்தி:

விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் கார்பன்டாசிம் இரசாயன பூஞ்சான கொல்லி மருந்து கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

ஆ. ரைசோபியம் விதை நேர்த்தி:

எதிர் பூஞ்சான கொல்லி கொண்டு விதைநேர்த்தி செய்யப்பட்ட விதைகளை ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் ஒரு பொட்டலம் (200 கிராம்) ரைசோபியம் நுண்ணுயிர் கலவையைச் சேர்த்து சிறிது தண்ணீர் மற்றும் ஆறிய அரிசிக்கஞ்சி ஆகியவற்றை சேர்த்துக் கலந்து 15 நிமிட நிழலில் உலரவைத்து விதைப்பு செய்யலாம்.

விதை நேர்த்தியின் பயன்கள்:

** விதைமூலம் பரவும் நோய்களான வேர் அழுகல், வாடல் நோய் ஆகியவற்றை கட்டுப்படுத்தலாம்

Follow Us:
Download App:
  • android
  • ios