பசுமை புரட்சியால் மறக்கடிக்கப்பட்ட விதை நேர்த்தி முறை…

If the Green Revolution seed marakkatikkappatta
if the-green-revolution-seed-marakkatikkappatta


பசுமை புரட்சி முன்னால் நம் விவசாயிகள் நாட்டு பசு சாணம் மற்றும் மூத்திரம் மூலம் விதை நேர்த்தி செய்து வந்தனர். மிகவும் திறமை வாய்ந்த இந்த முறை பசுமை புரட்சி வந்த பின் வேண்டுமென்றே மறக்கடிக்கப் பட்டது.

இதற்கு பதிலாக விஷ ரசாயன பூச்சி மருந்துகள் பரிந்துரை செய்ய பட்டன. இவற்றால், நிலத்தில் உள்ள நன்மை தரும் பூஞ்சணங்களும், பூச்சிகளும் கொள்ளப்பட்டன.

மறக்கடிக்கபட்ட இந்த முறையை “பீஜ மித்ரா” என்று புத்துணர்வு பெற்றுள்ளது.

பீஜ மித்ரா எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்:

20 லிட்டர் நீர்,

5 கிலோ நாட்டு பசு சாணம்,

5 லிட்டர் நாட்டு பசு மூத்திரம்,

50 கிராம் சுண்ணாம்பு,

நிலத்தில் இருந்து எடுக்க பட்ட ஒரு கை மண்.

செய்முறை:

2. 5 கிலோ நாட்டு பசு சாணத்தை எடுத்து ஒரு துணியில் கட்டி டேப் மூலம் கட்டவும். 20 லிட்டர் நீரில் 12 மணி தொங்க விடவும் ஒரு லிட்டர் நீர் எடுத்து 50 கிராம் சுண்ணாம்பை இட்டு வைக்கவும் அடுத்த நாள் காலை, சாணம் கட்டி வைத்த மூட்டையை எடுத்து இந்த நீரில் அழுத்தவும். கைப்படி மண்ணை எடுத்து இந்த கலவையில் சேர்த்து நன்றாக கலக்கவும் 5 லிட்டர் நாட்டு பசு மூத்திரத்தை இதனுடன் கலந்து சுண்ணாம்பை சேர்த்து, வடி கட்டவும் இப்போது பீஜ மித்ரா ரெடி

பயன்படுத்தும் முறை:

கையால் விதைகளை பீஜ மித்ராவில் ஊற வைத்து, காய வைத்து விதைக்கவும். இயற்கை முறைப்படி செய்யப்படும் இந்த விவசாயத்தால் தொட்டதெல்லாம் பொன் தான்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios