howt to prevent crops from insects

நெல்லைத் தாக்கும் நெற்பழம் நோய்

நெற்பழம் நோய் கோ 43 ரக நெல்லில் அதிகமாக தாக்கும். பொதுவாக இந்த நோய் கதிர்வெளிவந்த நிலையில் நெல்மணிகளில் மேல் பால்பிடிக்கும் தருணத்தில் ஒருவித பழம் போன்ற பூசாணம் காணப்படும். இதனால் மகசூல் பெருமளவில் பாதிக்கப்படும்.

தடுக்கும் முறை

ஒரு கிலோ விதைக்கு சூடோமோனஸ் பத்து கிராம் அல்லது கார்பன்டாசிம் இரண்டு கிராம் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து ஈர விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

நோய் அறிகுறி தென்படும் முன் டில்ட் 0.1 சதம் அல்லது காப்பர் ஹைராக்சைடு 500 கிராம் ஒரு ஏக்கர் என்ற அளவில் பூக்கும் தருணத்தில் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

தேவையில்லாமல் தழைச்சத்து உரங்களை இடக்கூடாது.

மேற்கண்ட மருந்துகள் கிடைக்காத பட்சத்தில் சூடோமோனஸ் எதிர் பூஞ்சால் மருந்தினை நோய் அறிகுறி தென்படும் முன் ஏக்கருக்கு 400 கிராம் என்ற அளவில், பூக்கும் தருணத்திலும், பால்பிடிக்கும் தருணத்திலும் 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.