அதிக மகசூல் பெற சூடோமோனஸை எப்படி பயன்படுத்தனும்? தெரிஞ்சுக்குங்க…
அதிக மகசூல் பெற சூடோமோனஸ்
1.. பொதுவாக வெப்ப மண்டல பகுதிகளில் வேர் அழுகல்நோயும், வாடல்நோயும் அதிக அளவில் காணப்படுகின்றன.
2.. இந்த பூசனங்களைக் கட்டுப்படுத்த விதையுடன் பூசனக்கொல்லி மருந்து கலக்கப்படுகிறது.
3.. ஒரு கிலோ நெல் விதைக்கு 10 கிராம் சூடோமோனஸ் மருந்தினை கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
4.. ”சூடோமோனஸ் ப்ளோரோசன்ஸ்” என்ற நன்மை பயக்கும் பாக்டீரியா வேரழுகல் நோய்களை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது.
5… மேலும் நெற்பயிரில் குலை நோய், இலையுறைகருகல் நோய், பாக்டீரியா இலை கருகல் நோய் போன்றவற்றையும் வாழையில் வாடல் நோயையும், உளுந்து மற்றும் நிலக்கடலையில் வேரழுகல் நோயையும் கட்டுப்படுத்துகிறது.
6.. இவற்றை கட்டுப்படுத்துவதன் மூலம் அதிக மகசூல் பெறலாம்.