Asianet News TamilAsianet News Tamil

செயற்கை முறையில் குஞ்சு பொரிக்க செய்வது எப்படி? இதை வாசிங்க…

How to smell artificially Read this ...
How to smell artificially Read this ...
Author
First Published Sep 1, 2017, 12:35 PM IST


இந்த எளிய முறையை வாத்து, வான் கோழி, கினிக் கோழி மற்றும் காடை முட்டைகளை பொரிக்கச் செய்யலாம்.

** அட்டைப்பெட்டி அல்லது சாந்துச்சட்டி அல்லது பழைய மண்பானை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து அதனுள் பாதி அளவிற்கு அரிசித் தவிடு அல்லது மணலை நிரப்பவும்.

** நிரப்பப்பட்ட அரிசித் தவிடு அல்லது மணலின் மீது குஞ்சு பொரிக்க வேண்டிய கோழி ** முட்டைகளை வைக்கவும்.

** வட்டத்தட்டினுள் பொருத்தப்பட்ட 15 வாட் முதல் 40 வாட் வரையிலான மின்சார பல்பினை தவிடு அல்லது மணலின் மீது பரப்பப்பட்ட முட்டைகளின் மேல் சீரான வெப்பம் பரவத்தக்க வகையில் தொங்கவிடவும்.

** 100 டிகிரி பார்ஹீன் அளவு சீரான வெப்பம் தரத்தக்க வகையில் மின்சார பல்புக்கும், கோழி முட்டைகளுக்கும் இடையே உள்ள தூரத்தை அவ்வப்போது தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக்கொள்ளவும்.

** உடல் வெப்ப நிலையைக் கணக்கிடக்கூடிய வெப்பநிலைமானியை பயன்படுத்தி கோழி முட்டையின் மீது சீரான வெப்பம் பரவச் செய்யும் வகையில் கண்காணித்துக்கொள்ளலாம்.

** முட்டைகளை முதல் நாள் முதல் 17வது நாள் வரை ஒரு நாளைக்கு 3 முறை வீதம் அதாவது 8 மணி நேரத்திற்கு ஒருமுறை திருப்பி விடவேண்டும்.

** 18-வது நாள் முட்டைகளைத் திருப்பி விடுவதை நிறுத்திவிட வேண்டும்.

** 18-வது நாள் முதல் ஈரப்பதம் 80% வரை தேவைப்படுவதால் வெது வெதுப்பான நீரில் நனைத்த பருத்தி துணியை முட்டைகளின்மீது 1 நிமிடம் பரப்பி விடவும். இவ்வாறு 18 வது நாள் முதல் 22வது நாள் வரை ஒரு நாளைக்கு 3 முறை செய்தால் குஞ்சு பொரிப்புத் திறன் நன்கு இருக்கும்.

** மின்சாரத் தடை ஏற்பட்டு வெகு நேரம் ஆகிவிட்டால் சற்றே சூடு செய்யப்பட்ட தவிட்டின் மூலம் முட்டைகளை மூடி வைத்து விடவும்.

Follow Us:
Download App:
  • android
  • ios