கோழி வளர்ப்பில் சாய்வான தரையை எப்படி அமைப்பது? அதனால் என்ன பயன்?
சாய்வான தரை
இந்த வகை தரை அமைப்பில் இரும்பு உருளைகள், அல்லது மர ரீப்பர்கள் தரையினை அமைக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
இவை தரையிலிருந்து 2-3 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு, அவற்றுக்கிடையிலுள்ள ஓட்டைகளின் வழியாக கோழிகளின் எச்சம் கீழே விழுந்துவிடும்.
மர ரீப்பர்களும், இரும்பு உருளைகளும் 2 இஞ்ச் அளவு விட்டம் உடையதாக ஒவ்வொரு உருளைகளுக்கும் இடையில் ஒரு இஞ்ச் இடைவெளியும் இருக்கவேண்டும்.
நன்மைகள்
கடினமான தரை அமைப்பினை விட இதற்கு குறைவான இட வசதியே தேவைப்படும்.
கோழிகளுக்கு ஆழ்கூளமாகப் பயன்படுத்தப்படும் படுக்கைப் பொருட்கள் குறைந்த அளவே தேவைப்படும்.
கோழிகளின் எச்சத்தை கையால் எடுத்துக் கையாள்வது தடுக்கப்படுகிறது.
சுகாதாரமானது
வேலையாட்களின் அளவைக் குறைக்கிறது.
மண் மூலம் ஏற்படும் நோய்களின் தாக்கம் குறைவு
தீமைகள்
எப்போதும் அமைக்கப்படும் கடினமான தரை அமைப்புகளை விட அதிக முதலீடு தேவை.
ஒரு முறை வடிவமைத்த பிறகு மீண்டும் மாற்றி அமைக்கும் வாய்ப்பு குறைவு
சிந்தப்பட்ட தீவனம், உருளைகளுக்கு இடையிலுள்ள ஓட்டைகள் வழியாக கீழே விழுந்துவிடும்.
ஈக்களின் தொல்லை அதிகம்.