கோடை வெப்பத்திலிருந்து மரங்களை எப்படியெல்லாம் பாதுகாக்கலாம்…

How to protect trees from summer heat
How to protect trees from summer heat


மரங்கள் காய்ந்து விடாமல் கோடை களங்களில் பராமரிப்பது மிகவும் முக்கியம்.  மார்ச் மாதம் முதல் வறட்சி ஆரம்பிக்கும், பனிக்காலம் முடிந்து கோடைகாலம் ஆரம்பமாகும்.

தண்ணீர் பற்றாக்குறையால் வறட்சி காலங்களில் மரங்கள் காய்ந்துபோக தொடங்கும்.  இந்த நேரங்களில் நீர் மேலாண்மையை கடைபிடித்து மரங்களை வறட்சியிலிருந்து பாதுகாத்திட வேண்டும்.

இந்த வருடம் தமிழகத்தில் நீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடியது. மேலும் இந்த வருடம் வந்த புயலால் பல மரங்களை பல விவசாயிகள் இழந்து விட்டனர்.  உதாரணமாக விவசாயிகள் அவர்களின் வயல் வரப்பு ஓரங்களில் பிரபலமாக நடப்படும் மரங்கள். தேக்கு, மகோகனி, செம்மரம். குமிழ்தேக்கு, மாஞ்ஜியம். இவை அதிக அளவில் புயலால் சேதம் அடைந்து உள்ளன.

மலை வேம்பு இவை ஓரங்களில் மட்டும் இல்லாமல் முழு பயிராகவும் பயிரிடப்படுகின்றன. வரப்பு ஓரங்களில் பயிரிடும் மரங்களுக்கு பயிர்களுக்கு பாய்ச்சும் தண்ணீரே போதுமானது.

மலை வேம்பு போன்ற வயல் முழுவதும் நடும் மரப்பயிர்களுக்கு குறைந்தது பதினைந்து நாட்கள் ஒருமுறை யாவது தண்ணீர் பாய்ச்சவேண்டும். அப்போது தான் வளர்ச்சி பாதிக்காது. சவுக்கு மரங்களுக்கு மட்டும் கோடைகாலத்தில் பத்து நாட்கள் ஒருமுறை கண்டிப்பாக நீர் பாய்ச்ச வேண்டும். ஏனெனில் சவுக்கு மரங்களுக்கு ஆனிவேர் கிடையாது. பக்க வேர்கள் மட்டுமே.

கோடை வெப்பத்திலிருந்து மரங்களை எப்படியெல்லாம் பாதுகாக்கலாம்… 

1. மரக்கன்று குறைந்தது இரண்டு அடி உயரம் மற்றும் . நல்ல கிளைவேர்கள் இருக்க வேண்டும். ஓரளவு வெயில் படும் இடத்தில் இருந்திருக்க வேண்டும்.

2. நடவுக்குழி குறைந்தது ஒன்னரை அடி ஆழம் இருக்க வேண்டும். அதில் முதலில் ஒரு கைப்பிடி அளவில் சுண்ணாம்பு தூள் தூவவேண்டும்.பிறகு மண்புழு உரம் ஒரு கிலோ அரை கிலோ வேப்பம்புண்ணாக்கு இவற்றுடன் மண் கலந்து குழியை அரை அடி உயரம் நிரப்ப வேண்டும்.

அதன்மீது செடி நடும் போது கிட்டத்தட்ட தரைமட்டத்தில் இருந்து ஒரு அடி ஆழத்தில் நடவு செய்வதால் ஈரப்பதம் வேருக்கு கிடைப்பதுடன் வேர் வளர்ச்சி சிறிதளவு ஆழமாக பரவுவதால் வேகமான காற்றை கூட தாங்கும் சக்தி மற்றும் வேர் கரையான் தாக்காமல் தப்பிக்கும். வறட்சியை நன்கு தாங்கி வளரும்

3. உயிர் உரங்கள் தொழுஉரத்துடன் கலந்து ஆறுமாதங்களுக்கு ஒரு முறை வேரில் இடுவதாலும் வறட்சி தாங்கும்.

4. அரைகிலோ சாணம், அரை லிட்டர் கோமியம் , கால் கிலோ வெல்லம், கால் லிட்டர் மோர், இவற்றை கலந்து ஒரு வாரம் புளிக்க வைத்து சம பங்கு தண்ணீர் கலந்து வேரில் ஊற்றினால் கோடைகாலத்தில் வறட்சி தாங்கி வளரும். வேகமான வளர்ச்சி இருக்கும்.

5. பக்கவாட்டில் சிறு துளை உள்ள சிறிய பானைகளை வேருக்கு அருகில் மண்ணில் புதைத்து அதாவது பருத்தி துணியை துளைக்கு உட்புறம் மற்றும் வெளிப்புறம் இருக்குமாறு நன்கு சுற்றி ஓட்டையில் அடைத்து வைப்பதால் ஈரப்பதம் தொடந்து வேருக்கு கிடைக்கும்.

பானையில் தண்ணீர் தீரும் போது நிரப்ப கொள்ளாம்.இயற்கை உர கரைசல்களையும் பானையில் ஊற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் மரங்கள் வறட்சி யை எளிதாக சமாளிக்கும்.

6. கோடைகாலத்தில் தேக்கு மஹோகனி குமிழ்தேக்கு போன்ற மரங்களில் அதிக பக்க கிளைகள் இல்லாமல் பார்த்துக்கொள்வதால் அதிக வெயிலின் மூலம் நீராவிப்போக்கு அதிகரித்து அதன் மூலம் மரங்கள் காய்ந்து இறப்பதை தவிர்க்கலாம். தொடர்ந்து இதே போன்று பராமரித்தால் புயல் வீசும் காலங்களில் மரங்களை சாயாமல் பாதுகாக்கலாம்.

7. அதேபோன்று தேக்கு, மஹோகனி, குமிழ்தேக்கு மற்றும் மாஞ்ஜியம் போன்ற மரங்கள் நேராக வளரும் தன்மை உடையதால் தரையில் இருந்து சுமார் முப்பது அடி உயரத்தில் தலையை துண்டாக வெட்டி விடுவதன் மூலம் மரங்கள் விரைவாக பருத்துவிடும்.

ஏனெனில் வேர்கள் உறிஞ்சும் சத்துக்கள் மரத்தின் நடுப்பகுதியில் மட்டுமே அதிகம் எடுத்துக்கொள்ளும். இது மட்டுமல்லாது வருடத்திற்கு மூன்று முறை பக்ககிளைகளை கழித்து விடவேண்டும்.

8. மரங்களில் வைரம் பாயும் தன்மையானது மண் வகை பொறுத்து அமையும். செம்மண் மற்றும் கரிசல் மண்ணில் வளர்க்கும் மரங்கள் விரிவாக வைரம் பாய ஆரம்பிக்கும்.

9. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படும் மரக்கன்றுகள் நன்கு முற்றிய மரங்களில் இருந்து விதைகள் தேர்ந்தெடுக்கப்படும் போது நல்ல வாளிப்பான மரக்கன்றுகளை பெறலாம். விரைவாக வளரும் தன்மையும் இருக்கும்.

10. எனவே விவசாயிகள் இதுபோன்ற எளிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வறட்சி காலத்தில் எளிதாக மரங்களை காப்பாற்றலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios