இலைவழி உரமிடலில் தரமான மொச்சை விதையை எப்படி உற்பத்தி செய்வது?
மொச்சையில் அதிக காய்பிடிப்பு மற்றும் விதை உற்பத்திக்கு இலைவழி உரம் அளித்தல் அவசியம்.
இதற்கு நாம் பல இராசாயனப் பொருட்கள் நீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள உரம் மற்றும் இரசாயனப் பொருட்களை நூறு லிட்டர் நீரில் கரைத்து விதைக்க வேண்டும். பின்னர் காய்பிடிப்பின் போதும் தெளிக்க வேண்டும்.
பூரியா – 2.5 கிலோ
டி.ஏ.பி – 650 கிராம்
மியூரியேட் ஆப் பொட்டாஷ் – 440 கிராம்
பொட்டாசியம் சல்பேட் - 9 கிராம்
டீபால் – 40 கிராம் போன்றவற்றை 100 லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.
கோ.1 இரகமாக இருந்தால் விதைத்த 100-வது நாளும், பின்னர் 120-வது நாளும் என இருமுறை அடிக்க வேண்டும்.
கோ.2 இரகமாக இருப்பின் விதைத்த 45-ஆம் நாளும் பின்னர் 55-ஆம் நாளும் தெளிக்க வேண்டும்.