விதை நேர்த்தி கரைசல் தயாரிப்பது எப்படி? அதனால் என்ன பயன்?

How to prepare the seed treatment solution So whats the use?
How to prepare the seed treatment solution So whats the use?


விதை நேர்த்தி கரைசல் - பீஜாமிர்தம்  

தேவையான பொருட்கள் :

1.     பசு மாட்டு சாணி 5  கிலோ

2.     கோமியம் 5 லிட்டர்

3.     சுட்ட சுண்ணாம்பு 50 கிராம்

4.     மண் ஒரு கைப்பிடி அளவு

5.     தண்ணீர் 20 லிட்டர்

செய்முறை

இவை அனைத்தையும் ( சுட்ட சுண்ணாம்பு இல்லாமல் ) சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நன்றாக ஊற விடவேண்டும்.

சுட்ட சுண்ணாம்பு விதை நேர்த்தி செய்யும் கரைசலில் ஒரு மணி நேரதிற்கு முன் சேர்க்கவும்

விதை நேர்த்தி செய்ய விதைகளை இந்த கரைசலில் 2 மணி நேரம் ஊற விட வேண்டும். மெல்லிய தோல் உடைய விதைகளை நிழலில் ஒரு தார் பாய் சாக்கில் மேல் பரப்பி , விதைகளின் மேல் பிஜமிர்தகரைசலை தெளித்து மெதுவா புரட்டி விடவும் .

நாற்றுகளாக இருந்தால் முங்கில் குடில் வைத்து அதன் வேர்களை 15 நிமிடம்  நனையவிட்டு பிறகு நடவு செய்ய வேண்டும்.

பயன்:

வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு , நூர் புழு  நோய்கள் தடுக்கப்படும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios