பழம் மற்றும் காய்கறி கரைசல்.

பழம் மற்றும் காய்கறி கரைசல் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் பயிர் ஊக்கி இது. இந்த கரைசல் நொதித்தல் முறையில் தயாரிக்கப்படும் ஒரு பயிர் ஊக்கி ஆகும்.

தேவையான மூலப்பொருட்கள்:

பழங்கள் மற்றும் காய்கறிகளின் கழிவுகள்.

பழங்கள் மற்றும் காய்களின் கழிவுகள். பழங்களில் இருந்து சீவி எறியப்படும் தோள்கள், ஜூஸ் செய்ய வெட்டி எறியப்படும் பழ வேஸ்ட்கள்.

நன்கு கனிந்த பழங்கள். காய்கரையிலிருந்து சீவி எறியப்படும் காய்களின் தோள்கள் மற்றும் வேஸ்டுகள். பூக்கள் வேஸ்ட், திருமணங்களில் இருந்து வேஸ்ட் ஆகும் பூக்கள்.

கடவுள் படத்திற்கு போடும் பூக்கள் மற்றும் மாலைகளில் உள்ள பூக்கள்.

ஆரஞ்சு மற்றும் சாத்துக்குடி பழத்தின் தோல். 

1. 3 கிலோ பழங்கள் மற்றும் காய்கறிகளின் கழிவுகள்.

2. 10 லிட்டர் தண்ணீர்.

3. 1 கிலோ மண்டை(உருண்டை) வெள்ளம்.

4. 20 லிட்டர் கேன்.

 பழம் மற்றும் காய்கறி கரைசல் செய்முறை:

1 கிலோ வெள்ளத்தை தண்ணீரில் நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை கேனில் ஊற்றி வைக்கவும். காய்கறி பழங்கள் கழிவுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். நறுக்கி வாய்த்த காய்கறி பழங்கள் கழிவுகளை கேனில் போட்டு நன்றாக இறுக்கி மூடி வைத்து விடவும். ஒரு பாதுகாப்பான இடத்தில வைத்து விடவும்.

அடுத்த நாளில் இருந்து உள்ளே உள்ள ஈஸ்ட் காய்கறி பழ வேஸ்டுகளை நொதிக்க (fermentation) செய்யும். இது நடைபெறும்பொழுது கழிவுகளில் இருக்கும் தாது உப்புகள், மினரல்ஸ், அமினோ அமிலம் போன்றவைகல் வெளியேறி தண்ணீருடன் கலக்க தொடங்கும். 

இந்த செயல் நடக்கும் பொது கார்பண்டை ஆக்ஸைடு வாயு உண்டாகும். அதனால் தினமும் ஒருமுறை கேனின் மூடியை திறந்து அந்த வாயுக்களை வெளியேற்றி விடவேண்டும். இவ்வாறு 30 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த நொதித்தல் முறையில் 30 நாட்களில் அணைத்து வாயுக்களும் வெளியேறி விடும். 31 வது நாள் கேனை காற்று புகை முடியாத அளவு நன்றாக மூடி வைக்கவும்.

அதன்பிறகு கேனை 60 நாட்களுக்கு பாதுகாப்பான இடத்தில் ஸ்டோர் செய்து வைத்துவிடவும். இந்த 60 நாட்களுக்கு எதுவும் செய்ய தேவை இல்லை. இந்த காலகட்டத்தை maturation period என்று சொல்வார்கள். அதாவது முதிர்வடையும் நிலை. இந்த நாள் முதிர்வடைவிற்கு பின் கழிவுகளில் உள்ள அணைத்து நுன்னூட்டங்களும் வெளியேறி தண்ணீருடன் கலந்து விடும்.  

60 நாட்களுக்கு பிறகு இந்த கலவையை எடுத்து வடிகட்டி சாரை சேமித்து வைத்து கொள்ளவும். தேவைப்படும்பொழுது தேவையான அளவு தண்ணீருடன் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம். 

பயன்படுத்தும் முறை:

இந்த கரைசலை இலை வழியாக கொடுக்க வேண்டும். இது ஒரு பயிர் ஊக்கியே தவிர பூச்சிகளை கட்டுப்படுத்தாது.

அணைத்து பயிர்களுக்கும் இந்த கரைசல் ஒரு நல்ல பயிர் ஊக்கியாக வேலை செய்கிறது. 

ஆராய்ச்சி முடிவின்படி அணைத்து வகையான புளிப்பு சுவை கொண்ட மரங்களுக்கு நல்ல பயன் தருகிறது. 

மாங்காய், நெல்லி, பப்பாளி, தக்காளி போன்ற புளிப்பு சுவை கொண்ட பயிர்களுக்கு சிறந்த பயிர் ஊக்கியாக செயல்படுகிறது. இதனால் மிக அதிகமாக மகசூல் கிடைக்கும்.

இளம் பயிர்களுக்கு 2 மிலி 1 லிட்டர் தண்ணீருக்கு கலந்து அடிக்க வேண்டும். 30 நாட்களுக்கு மேலான செடிகளுக்கு 5 மிலி 1 தண்ணீருக்கு கலந்து அடிக்க வேண்டும். 

பெரிய மரங்களுக்கு 75 மிலி 10 லிட்டர் தண்ணீருக்கு பயன்படுத்தலாம்.