How to Prepare a Fish Acid? What are its benefits?

மீன் அமிலம்

தேவையான பொருள்கள்..

ஒரு கிலோ நாட்டு சர்க்கரை

ஒரு கிலோ மீன் கழிவுகள்

செய்முறை..

ஒரு கிலோ நாட்டு சர்க்கரை, ஒரு கிலோ மீன் கழிவுகள் இரண்டையும் நன்றாக கலந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் அல்லது டப்பாவில் போட்டு காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும்.

பதம் அறிதல்...

நாற்பது நாள்கள் கழித்து தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும். மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும்.

இந்த திரவத்திலிருந்து துளி கூட கெட்டை வாடை வீசாது.

பழவாடை அறிதல்...

பழவாடை வீசும்.இப்படி பழவாடை வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்பதை விவசாயிகள் தெரிந்து கொள்ள முடியும்.

பயன்படுத்தும் முறை...

இவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணிரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம்

பயன்கள்...

பயிர்கள் புத்துணர்ச்சி அடைந்தது போல் 3 நாள்களில் செழித்து காணத் துவங்கும்.

ஒரு முறை தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 6 மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்