விதைப்பிற்கு பிறகு பயறு சாகுபடியில் களை நிர்வாகம் செய்வது எப்படி?
விதைப்பிற்கு பிறகு பயறு சாகுபடியில் களை நிர்வாகம்
1.. ஒரு எக்டருக்கு 1.5 லிட்டர் புளுகுளோரலின் (பாசலின்) அல்லது 2 லிட்டர் பெண்டிமெத்தாலின் (ஸ்டாம்ப்) களைக் கொல்லியை 1 லிட்டர் நீருக்கு 2 மிலி வீதம் கலந்து விதைத்து 3 நாட்களுக்குள் நிலத்தில் அடித்து அகன்ற இலை களைகளை கட்டுப்படுத்தலாம்.
2.. களைக் கொல்லியை 50 கிலோ மணலுடன் கலந்தும் தூவலாம்.
3.. களைக் கொல்லியை கைத்தெளிப்பானால் தெளிக்க அகலவாய் தெளிப்பான் முனை நாசிலை பயன்படுத்த வேண்டும்.
4.. களைக் கொல்லியை வயலில் ஈரம் இருக்கும்போது தெளிக்க வேண்டும்.
5.. களைக் கொல்லியை மாலை நேரத்தில் தெளிப்பது நல்லது.
6.. தெளித்த மூன்று நாட்களுக்குள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
7.. நிலத்தில் களைக் கொல்லி தெளிக்கும்போது பின்னோக்கி நடந்து அதனை செய்ய வேண்டும்.
8.. களைக் கொல்லி அடிப்பதன் மூலம் களை எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.