Asianet News TamilAsianet News Tamil

இயற்கை முறையில் அரைக்கீரை சாகுபடி செய்வது எப்படி?

How to make semi-organic farming
How to make semi-organic farming
Author
First Published May 29, 2017, 11:56 AM IST


அரைக்கீரைக்கு அனைத்து மண் வகைகளும் ஏற்றவை. இதற்குப் பருவம் தேவையில்லை. கீரைக்கு எந்த ரசாயனமும் தேவையில்லை.

பூச்சி, நோய் தாக்குதல் இருந்தால், மூலிகைப் பூச்சி விரட்டி தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

அறுவடை முடிந்தவுடன் ஏக்கருக்கு 200 லிட்டர் அமுதக்கரைசலை பாசன நீருடன் கலந்து விட வேண்டும்.

பஞ்சகவ்யா தெளிப்பதாக இருந்தால் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கலந்து தெளித்தால் போதுமானது. இதைத் தவிர வேறு எந்த வளர்ச்சி ஊக்கியும் உரமும் தேவையில்லை.

விதைப்பு

’நிலத்துக்கு அடியுரமாக ஏக்கருக்கு 12 டன் எருவாக (தொழுவுரம்) கொட்டி, மூன்று நாட்கள் உழவு போட்டு மூன்று மாதம் நிலத்தைக்காய விடவேண்டும்.

பத்து அடிக்கு ஆறு அடி பாத்திகட்டி கீரை விதையை விதைக்கணும். அரைக்கீரை விதை சின்னதாக இருக்கிறதால ஒரு கிலோ விதைக்கு 2 கிலோ மண் கலந்து தூவி விடணும்.

அப்போதுதான் விதைகள் நிலத்துக்குள்ள போகும், இல்லையென்றால் மேலே நின்று விடும். தண்ணீர் கட்டும்போது விதைகள் மிதக்க ஆரம்பித்துவிடும்.

அறுவடை

விதைச்ச பிறகு முதல் தண்ணியை செழும்பா கட்டணும். கரம்பை மண்ணா இருந்தா வாரத்துக்கு ஒரு தண்ணி கட்டுனா போதும். செம்மணுக்கு ரெண்டு நாளைக்கு ஒரு தண்ணி காட்டணும்.

முதல் தண்ணி கொடுக்கிரப்பவே ஏக்கருக்கு 15 கிலோ கணக்குல வேப்பம் புண்ணாக்கை மூட்டையில கட்டி வாய்க்கால்ல வச்சுடுவேன். தண்ணி போறப்ப புண்ணாக்கு கரைஞ்சு நிலத்துக்கு போயிடும்.

அரைக் கீரையில பூச்சுத்தாக்குதல் இருக்கும். அதுக்கு தகுந்த பக்குவம் பண்ணணும். அதே போல வளர்ச்சிக்கான உரங்களையும் கொடுக்கணும்.

முதல் அறுவடை 25 நாட்கள் வந்து விடும். அதேபோல் 2-ம் பருவ அறுவடையும் செய்யும்போதும் பரிந்துரைக்கப்படுகிற உரத்தைக் கொடுத்தால் சீக்கிரமாக வளரும். அடுத்த அறுவடை 12 நாட்களிலேயே வந்து விடும்.

பூ இருந்தால் அதைப் பறிச்சுப் போட்டுட்டு அறுக்கணும். விதைகள் வேண்டும் என்றால் மூன்று மாதத்திற்கு பிறகு தண்ணி கட்டுறதைக் குறைச்சுக்கிட்டா பூ பிடிச்சு காய்கள் வரும்.

காயப்போட்டு தட்டி விதைகளை எடுத்துப் பயன்படுத்தலாம்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios