சம்பா சாகுபடியில் விதை நேர்த்தி செய்வது எப்படி?
சம்பா நாற்றங்கால் தயார் செய்ய ஏக்கருக்கு 8 செண்ட் பாத்தியில் 400 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் அல்லது கம்போஸ்ட் கலந்து இடவேண்டும்.
விவசாயிகள் நெல் விதைகளை நோய் எதிர் உயிரியான சூடோமோனாஸ் பாக்டீரியா ஒரு கிலோ விதைக்கு 10 என்ற அளவிலும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா 1 எக்கர் விதைக்கு தலா 200 கிராம் என்ற அளவில் கலந்து விதைகளை குறைந்த பட்சம் 12 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து முளை கட்டிய பின் விதைப்பது நல்லது.
இதனால் விதைகளின் முளைப்புத்திறன் அதிகரிக்கும்.
விதைகள் மூலம் பரவக்கூடிய நோய் கிருமிகள் அழிந்துவிடும்.