தேன் உருவாவது எப்படி? இதை தெரிஞ்சுக்கிட்டால் தேனீ வளர்ப்பது மிக சுலபம்...
தேன் உருவாவது எப்படி?
தேனீக்கள் உடலில் இருந்து வெளியாகும் மெழுகு மூலம் பல்வேறு அறைகளை உருவாக்கி அடையை விரிவாக்கி கொண்டே செல்லும். தேனீக்கள் அதிகாலை பெட்டிக்குள் இருந்து வெளியேறும். அவை வெளியேற பெட்டியின் கீழ் பகுதியில் சிறிய வழி இருக்கும்.
வெளியே செல்லும் தேனீக்கள், பூக்களிலுள்ள மதுரத்தை(இனிப்பான திரவம்) வாயில் எடுத்து வரும். தேனீயின் பின்னங்காலில் மகரந்தம் ஒட்டியிருக்கும். இரண்டையும் அடையிலுள்ள தேன் புழுக்களுக்கு உணவாகக் கொடுக்கும்.
மதுரத்தையும், மகரந்தத்தையும் சாப்பிடும் புழுக்கள் அதை கொப்பளித்து வெளியேற்றும்போது அது தேனாக அடையில் படிகிறது. பெட்டி வைத்த 8 மாதத்துக்குள் ஏற்கனவே இருந்த 3 ஆயிரம் தேனீக்கள் பெருகி 10 ஆயிரம் முதல் 12 ஆயிரமாக மாறிவிடும்.
இந்த எண்ணிக்கையில் தேனீக்கள் உருவான பின்னர், மாதம்தோறும் 2 கிலோ தேன் அடையில் உருவாகும். ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் தேன் எடுப்பதற்கேற்ற சூழல் இருந்தால், உற்பத்தி அதிகமாகும். 20 நாளுக்கொரு முறைகூட 2 கிலோ தேன் கிடைக்கும்.
தேன் எடுப்பதற்கேற்ற சூழல் குறைந்தால், அவை உள்ள இடங்களுக்கு பெட்டிகளை கொண்டு போய் வைக்க வேண்டும். அவை வெகுதூரத்திலோ, வேறு ஊர்களிலோ இருந்தால்கூட அங்கு பெட்டிகளை இடம்பெயர்க்க வேண்டும்.