கோழிக் குஞ்சுகளை அடைகாக்கும் அறை மற்றும் வைத்திருக்கும் அறை எப்படி இருக்க வேண்டும்?
அடைகாக்கும் அறை
இந்த அறையில் அடைகாப்பான்கள் வைக்கப்பட்டிருக்கும். இதில் வைத்திருக்கும் அடைகாப்பான்களின் அளவிற்கேற்ப இந்த அறையின் அளவும் இருக்கவேண்டும். அடைகாப்பானுக்கு குறைந்த இட வசதி இருந்தாலே போதுமானது.
இந்த அறையில் காற்று வெளியேறுவதற்கும் உள்ளே வருவதற்குமான சன்னல், முட்டைகளை நகர்த்துவதற்கும், குஞ்சுகளை வெளியே எடுப்பதற்கு வசதியாக இட வசதி இருக்கவேண்டும். ஒவ்வொரு குஞ்சு பொரிப்பானுக்கும் இடையில் குறைந்தது மூன்று அடி இடைவெளியும், குஞ்சு பொரிப்பானின் பின்பகுதிக்கும், சுவற்றும் இடையில் மூன்று அடி இடைவெளியும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஒன்றையொன்று பார்த்தால் போல் அமைக்கப்பட்டிருக்கும் குஞ்சு பொரிப்பான்களுக்கு இடையில் 10 அடி இடைவெளி குறைந்தது இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
குஞ்சுகளை வைத்திருக்கும் அறை
அடைகாக்கும் அறைக்கு அடுத்த அறையில் குஞ்சுகளை வைத்திருக்கும் அறை இருக்கவேண்டும். இதில் 65% ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். இதனால் குஞ்சுகளின் உடலிலிருந்து தண்ணீர் வெளியேறுவது தடுக்கப்படும்.
இந்த அறையில் குஞ்சுகளின் பாலினம் கண்டறியப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு, தடுப்பூசி அளிக்கப்பட்டு பெட்டிகளில் வைக்கப்பட்டு தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.