அசோலாவை வளர்க்கும், வளர்ச்சி மற்றும் கொடுக்கும் முறை இதோ…

how to grow give the Azolla
how to grow give the Azolla


அசோலாவை வளர்க்கும் முறை:

இரண்டு மீட்டர் அகலம், 4 மீட்டர் நீளம் கொண்ட சில்பாலிதீன் கவர். அதை ஒரு அரை அடி உயரம் கொண்ட பாத்திபோல் அமைத்து அதில் சலித்த செம்மண் ஒரு இஞ்ச் அளவிற்கு சம அளவில் பரப்ப வேண்டும்.

மேலும், 3 இஞ்ச் அளவிற்கு நீர் நிரப்பி அதில் 10 கிலோ பசுஞ்சாணம் நன்கு கரைத்து விடவேண்டும்.

பிறகு அசோலா விதைகளை அதில் தூவ வேண்டும். இது 6-7 நாட்களில் அந்த பாத்தி முழுவதுமாக வளர்ந்துவிடும். நமது தேவைக்கேற்ப பாத்திகள் அமைக்கலாம்.

அசோலாவின் வளர்ச்சி முறை:

விதைத்த 3 நாட்களில் எடை மூன்று மடங்காக பெருகும்.

பசுந்தீவனம் 15 நாட்களில் நல்ல வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக இருக்கும்.

15 நாட்கள் கழித்து நாள் ஒன்றுக்கு 500 கிராமிலிருந்து 1 கிலோ வரை அறுவடை செய்யலாம்.

அசோலாவை கொடுக்கும் முறை:

1. தினமும் 500கிராம்- 1 கிலோ அசோலாவை எடுத்து நீரில் அலசிக்கொள்ள வேண்டும்.

2. பச்சையாகவோ அல்லது பதப்படுத்தியோ அல்லது அடர் தீவனத்துடன் கலந்தும் கொடுக்கலாம்.

3. உணவு உப்புடன் சேர்த்தும் அளிக்கலாம்.

4. வைக்கோலுடன் சேர்த்தும் அளிக்கலாம்.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios