தென்னையில் ஊடுபயிராக சேனைக்கிழங்கு செய்து 25 ஆயிரம் வரை வருமானம் பெறலாம்…
தென்னையில் ஊடுபயிராக பயிர்செய்ய ஏற்ற சேனை இரகங்கள், கஜேந்திரா மற்றும் ஸ்ரீபத்மா. ஏப்ரல், மே மாதங்கள் சேனைக் கிழங்கு நடவு செய்வதற்கு ஏற்ற பருவமாகும்.
ஒரு ஏக்கர் தென்னந்தோப்பில் சேனைக்கிழங்கை நடவு செய்ய 1400 கிலோ கிழங்குகள் தேவைப்படும். 7.5 × 7.5மீ இடைவெளியுள்ள 2 தென்னை மரங்களுக்கு மத்தியில் 4 வரிசைகளில் சேனைக்கிழங்கை நடவு செய்ய வேண்டும்.
முதலில் 30 × 30செ.மீ அளவுள்ள குழிகள் எடுத்து 10 கிலோ தொழு உரத்தையும் மேல் மண்ணையும் இட்டு குழியினை நிரப்ப வேண்டும்.
இந்தக் குழியில் 20 - 25செ.மீ ஆழத்தில் விதைக் கரணைகளை நடவு செய்ய வேண்டும்.
நட்ட 2 மாதத்திற்கு பின்பு ஹெக்டேருக்கு 80 கிலோ தழைச்சத்து, 60 கிலோ மணிச்சத்து, 100 கிலோ சாம்பல்சத்து கொடுக்கக்கூடிய இரசாயன உரங்களை இட வேண்டும்.
எட்டாவது மாதத்தில் கிழங்குகள் முற்றி ஜனவரி, பிப்ரவரியில் அறுவடைக்கு வரும், ஒரு ஹெக்டேர் தென்னந்தோப்பில் சேனைக்கிழங்கு ஊடுபயிர் செய்வதால் கிடைக்கும் சராசரி மகசூல் 12 டன்னாகும். நிகர வருமானம் ரூ.25,000.
மேலும் சேனைக் கிழங்குகளை நீண்ட நாட்களுக்கு கெடாமல் சேமித்து வைக்க முடியும்