சவுக்கு சாகுபடி செய்யும் விதம்…

how to-cultivate-savukku


சவுக்கு சாகுபடிக்காக தேர்வு செய்யும் நிலத்தை ஐந்து மாதங்கள் காயப்போட வேண்டும். பிறகு ஏக்கருக்கு இரண்டு டன் அளவில் தொழுவுரத்தைக் கொட்டிப் பரப்பி, எட்டு சால் உழவு செய்ய வேண்டும்.

பிறகு, 3 அடி இடைவெளியில் இரண்டு அங்குல அளவுக்கு குழி எடுத்து சவுக்குக் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 4 ஆயிரத்து 800 கன்றுகள் வரை நட முடியும்.

நடவு செய்து ஓர் ஆண்டு வரை பத்து நாள்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். அதன்பிறகு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்தால் போதுமானது.

நிலத்தில், களைகளை மண்ட விடக்கூடாது. ஆண்டுக்கு, இரண்டு முறை கவாத்து செய்ய வேண்டும்.

ஒன்றரை ஆண்டிலிருந்து விற்பனை வாய்ப்பைப் பொறுத்து மரங்களை வெட்டி விற்பனை செய்யலாம்.

ஐந்து வயது வரை வளர்ந்த மரங்களுக்கு நல்ல விலை கிடைக்கும். மொத்த அறுவடையும் முடிந்த பிறகு நிலத்தை சுத்தப்படுத்தி, மீண்டும் 5 மாதங்கள் காய விட்டு புது நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.

சவுக்குக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து விட்டால், பாசனத்துக்காக வேலையாட்கள் தேவைப்படமாட்டார்கள்.

தண்ணீர்ச் செலவையும் குறைக்க முடியும். களைகளும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios