கத்தரிக்காயில் தோன்றும் இந்த பூச்சிகளை எப்படி கட்டுப்படுத்தலாம்? இதோ வழிகள்..

How to control these insects Here are the ways ..
How to control these insects Here are the ways ..


கத்தரிக்காயில் நூற்புழு தாக்குதல், வெள்ளை ஈ போன்ற பூச்சிகள் தாக்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனை கட்டுப்படுத்தும் முறைகள்.

நூற்புழு தாக்குதல்:

இதனை கட்டுப்படுத்த 3 லிட்டருக்கு 4 கிராம் என்ற அளவில் 50 சதவீத கார்பரில் தூளை கலந்து தெளிக்கவேண்டும்.

காய்களை தாக்கும் பருவத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை குயினால்பாஸ் 2 மில்லியை, 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

நடவு செய்த 15 நாட்களுக்கு பின்னர் ஒரு எக்டேருக்கு 15 கிலோ கார்போபியூராணை செடிகளின் வேர்ப்பாகத்தில் இடவேண்டும்.

நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்த விதைகளை ட்ரைகோடெர்மா விரிடியை 1 கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் பூஞ்சாண விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

மேலும் 1 சதுர மீட்டருக்கு 10 கிராம் கார்போபியூரான் இடுதல் வேண்டும்.

வெள்ளை ஈக்கள்:

வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த ஒரு எக்டேருக்கு 12 மஞ்சள் நிற ஒட்டும் பசை தடவிய அட்டை பொறியை வக்க வேண்டும்.

1 லிட்டர் தண்ணீருக்கு, 2 கிராம் என்ற அளவில் டைத்தேன் எம் 45 கலந்து 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்க வேண்டும்.

இதன் மூலம் இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தலாம். வாடல் நோயை கட்டுப்படுத்த இந்நோய் தாக்கப்பட்ட செடியை வேருடன் பிடுங்கி எரித்து விடவேண்டும்.

நோய் பரப்பும் காரணிகளை கட்டுப்படுத்த மீதைல்டெமட்டான் 2 மில்லியை தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

நடவு செய்த 55-60 நாட்களில் முதல் அறுவடை ஆரம்பிக்கும். காய்கள் பிஞ்சாக விதைகள் முற்றுவதற்கு முன்பு அறுவடை செய்ய வேண்டும்.

காய்களை சுமார் 4 முதல் 5 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம். அறுவடை செய்யும் போது காம்பின் நீளம் 4-6 செ.மீ இருக்குமாறு அறுவடை செய்ய வேண்டும்.

மேற்கண்ட முறைகளை பின்பற்றி எக்டேருக்கு 25 முதல் 30 டன்கள் மகசூலினை பெறலாம்.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios