உளுந்து பயிரைத் தாக்கும் புரோட்டினியா புழுவை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்…

How to Control Protenia Worm in blackgram
How to Control Protenia Worm in blackgram


உளுந்து பயிரைத் தாக்கும் புரோட்டினியா புழு:

பயிரிடப்பட்டுள்ள உளுந்து மற்றும் பச்சைப்பயறுகளில் புரோட்டினியா புழு தாக்குதல் காணப்படுகிறது. 

நெல் தரிசு உளுந்து பயிரில் சேதத்தை விளைவிக்கும் பூச்சிகளில் புரோட்டினியா புகையிலைப்புழு முக்கியமானதாகும். 

இப்புழு முழு இலைகளையும், பூ மொட்டுகளையும், காய்களையும் தின்று சேதப்படுத்தும். 

இப்பூச்சியின் தாக்குதல் இரவு நேரங்களில் அதிகம் காணப்படும்.  புழுக்கள் பகல் நேரத்தில் மண் வெடிப்புகளிலும், சருகுகளின் அடியிலும் அறுவடை செய்யப்பட்ட நெற்பயிரின் அடித்தூர்களிலும் பதுங்கி இருக்கும். 

அந்துப்பூச்சியின் முன் இறக்கை பழுப்பு நிறமாகவும், வெள்ளை நிறக்கோடுகளுடன், பின் இறக்கை பழுப்பு நிறமாகவும், பழுப்பு நிறத்திட்டுகளுடன் காணப்படும். 

ஒரு பெண் அந்துப்பூச்சி 200 முதல் 300 முட்டைகள் வரை இலைகளின் மேற்பரப்பில் குவியலாக இட்டு தன் உடம்பில் உள்ள செதில்களால் மூடி வைத்திருக்கும்.

தாக்குதல்:

முட்டையில் இருந்து வெளிவரும் புழுவானது இலைகளின் மேற்பரப்பில் உள்ள பச்சையத்தை சுரண்டி தின்று சேதப்படுத்துகிறது. 

புழு வளர்ச்சி அடைந்த பின்னர் தனித்தனியாகப் பிரிந்து சென்று இலைகளையும், பூ மொட்டுகளையும் தின்று அதிகமான அளவில் சேதப்படுத்தும். 

கட்டுப்படுத்தும் வழி

இப்பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளை கையாள வேண்டும். 

இப்பூச்சியின் முட்டை குவியலையும், முட்டையிலிருந்து பொரித்து கூட்டமாக மேயும் வளர்நிலை புழுக்களையும் சேகரித்து அழித்திடவேண்டும்.

இப்பூச்சியின் தாக்குதல் அதிகமாகும்போது குளோர்பைரிபாஸ் 500 மில்லி அல்லது டைகுளோர்வாஸ்-76 என்ற 400 மில்லி மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளையில் தெளித்து பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios