How to control pest and disease in biomass

உயிரி முறையில் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துதல்:

1... கொன்று தின்னிகள்

இத்தகைய உயிரினங்கள் மற்ற உயிரினங்களை உணவாகக் கொள்ளும். உதாரணம்: பல வகையான சிலந்திகள், தட்டான்பூச்சிகள், ஊசிதட்டான் மற்றும் பொறி வண்டுகள், க்ரிஸொபா இனங்கள் மற்றும் பறவைகள் முதலியவை.

2.. பாரசிட்டாய்ட்டுகள்

இத்தகைய உயிரினங்கள் தனக்கு தங்கி இடம் அளித்த உயிரினத்தின் உடல் மீது முட்டையிட்டு தங்கள் ஆயுள் சுழற்சியை அங்கேயே முடித்துக்கொள்ளும் அதனால் தங்க இடமளித்த உயிரினம் கொல்லப்படும். 

தங்க இடமளித்த உயிரினத்தின் வளர்ச்சி நிலையின் அடிப்படையில் பாரசிட்டாய்ட்டுகள் பல வகைப்படுத்தப்படும் முட்டை, இளம்புழு, முதிர்ந்த கூட்டுப்புழு, முட்டை - புழு அல்லது இளம்புழு - கூட்டுப்புழு பாரசிட்டாய்ட்டுகள் எனப் பல வகைப்படும். 


3.. நோய்க் கிருமிகள்

இத்தகைய நோய்க் கிருமிகள் பிற உயிரினங்களில் நோயை ஏற்படுத்தி அவற்றை அழிக்கின்றன. பூஞ்சானங்கள், பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் ஆகியன முக்கியமான நோய்ப் பரப்பும் கிருமிகளாகும் சில வகை நூற்புழுக்களும் பூச்சிகளுக்கு நோயை உண்டாக்குகின்றன .

பல வகையான ஹிர்சுடெல்லா, ப்யூவெரியா, நொமுரெ மற்றும் மெட்டாரைசியம் போன்றவை முக்கியமான பூஞ்சானங்கள்.

முக்கியமான வைரஸ்களில் நியூக்ளியர் பாலிஹெட்ரொஸிஸ் வைரஸ் (NPV) மற்றும் க்ரானுலொலிஸ் வைரஸ் போன்றவை இடம்பெறும்.

பெசில்லஸ் துரிங்கென்ஸிஸ் (B.t.) மற்றும் B. பெசில்லஸ் பொப்பில்லே போன்றவை முக்கியமான பாக்டீரியாக்கள்.