சுத்தமான பசும்பால் பெற மாடுகளை எப்படியெல்லாம் பராமரிக்கலாம்…
இயற்கை முறை பால் பண்ணை:
சுத்தமான பசும்பால் வேண்டும் என்றால் சத்தியமா நகரங்களில் கிடைக்காது. கிராமங்களில் இன்றும் நம் கண்முன்னே பசு மாட்டில் பால் கறந்து விற்கின்றனர். அந்தப் பாலைத் தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டாலே, உடம்பில் தெம்பும், பலமும் பெருகும்.
மாடுகளுக்கு சோள மாவு 60 சதம், மீதமுள்ள 40 சதம் மினரல், கால்சியம், உப்பு உள்ளிட்ட சத்துகள் அடங்கிய இயற்கை சத்து மாவை, மாடுகளுக்கு வழங்குவதன் மூலமும், சுத்தமான கிணற்று நீரை கொடுப்பதன் மூலமும், மாடுகளுக்கு கொடுக்கும் தீவனத்தைப் பொருத்துத்தான் பாலின் தரமும் இருக்கும்.
மாடுகளை எப்படி பராமரிப்பது:
தினசரி அதிகாலை சுமார் ஒரு மணிக்கு பால் கறக்கத் தொடங்கனும். முடிந்ததும், உடனே மாட்டைக் குளிப்பாட்டி, காய்ந்த நாற்று உள்ளிட்டவற்றை உணவாகக் கொடுத்து, தண்ணீர் வைக்கனும். பிற்பகலில் சுமார் ஒரு மணிக்கு பால் கறக்கத் தொடங்கனும். இதையடுத்தும் மாடுகளுக்கு உணவு கொடுக்கனும்.
நோய் பாதுகாப்பு முக்கியமாகும். ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை கால் காணை, வாய் காணை நோய் வரக்கூடும். எனவே, முன்னதாக தடுப்பூசி போட்டு விடனும்.
மஞ்சள் காமாலை, காய்ச்சல் ஏற்பட்டால் மாடுகள் உணவு எடுத்துக் கொள்ளாது. இதற்கும் மருத்துவரை அணுகி, அவரது அறிவுரைப்படி நடக்கனும்.
பருத்திக்கொட்டை, நயம் தவிடு உள்ளிட்டவற்றை மாடுகளுக்குக் கொடுக்கனும்.
பத்துக்கும் மேல் மாடுகள் பால் பண்ணையில் இருந்தால் கண்டிப்பாக பயிற்சி அவசியமாகும். மேலும், மாட்டுத் தீவனம் தயாரிக்கும் பயிற்சியும் அவசியம்.
இயற்கை முறையில் மாடுகளுக்கு கருவூட்ட வேண்டும். அவற்றை நன்கு பராமரித்து, பால்மாடாக மாற்றிவிட்டேன். பால் பொருள்களான பன்னீர், நெய் உள்ளிட்டவை தயாரித்து லாபம் பெறலாம்.