மாடுகளுக்கு உண்டாகும் உண்ணிகளை எப்படி தவிர்ப்பது?

How to Avoid diseases in Cows
How to Avoid diseases in Cows


மாடுகளில் உண்ணிகளைத் தவிர்ப்பது எப்படி

** கோடைக்காலங்களில் மாடுகளை அதிகமான அளவில் உண்ணிகள் தாக்கும். இந்த உண்ணிகள் பெரும்பாலும் மாடுகளில் அவற்றின் காதுகளின் உள்ளேயும் பால்மடிப்பகுதியில் வாலுக்கு அடியிலும், உடலின் மேற்புறத்திலும் இருக்கும். 

** இந்த உண்ணிங்க ரத்தத்தை குடிக்க கடிப்பதால் கொசுக்கள் மனிதர்களை கடித்து மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சலை பரப்புவதுபோல உண்ணிகளும் மாடுகளில் நிணநீர் கட்டிநோய் (தெய்லீரியோசிஸ்), ரத்த சிறுநீர் நோய் (பேபிசியோசிஸ்) போன்ற நோய்களை பரப்பும். 

** இந்த தெய்லீரியோசிஸ் நோய் பாதிக்கப்பட்ட மாடுகளில் அதிகமான காய்ச்சல், ரத்தசோகை, தீவனம் எடுக்காமை, கண், மூக்கில் இருந்து நீர் வடிதல், மூச்சு விட சிரமப்படும். 

** மேலும் 20 லிட்டர் கறக்கும் மாடுகூட அரை லிட்டர் பாலுக்கு வந்துவிடும். பேபிசியோசிஸ் நோய் பாதிக்கப்பட்ட மாடுகள் அதிக காய்ச்சல், ரத்தசோகை, சிறுநீரானது ரத்தம் போல வரும். எனவே இந்த நோய்களிலிருந்து மாடுகளை காப்பாற்ற வேண்டுமென்றால் உண்ணிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

** அதாவது உண்ணிகள் ரத்தத்தில் ஓரணு ஒட்டுண்ணி நோய்களை பரப்புவதோடு மட்டுமல்லாமல் உண்ணிகள் அதிகமாக இருந்தால் ஆடு, மாடுகள் தலையை ஆட்டிக் கொண்டும், சுவற்றில் தேய்த்துக்கொண்டும், தீவனம் உண்ணாமல் மெலிந்தும் காணப்படும். 

** உண்ணிகளை கையில் பிடித்து நெருப்பில் போடுவது, மாடு மேல் மண்ணெண்ணெய் தடவுவது போன்று செய்யாமல் பூடாக்ஸ் மருந்தை வாங்கி 1 லிட்டர் தண்ணீரில் 2 மிலி மருந்து சேர்த்து கலந்து துணியில் நனைத்து மாடுகளின் எல்லா பாகத்திலும் தேய்க்க வேண்டும். குறிப்பாக மாடுகளின் காதுகளின் உட்புறம், மடிப்பகுதியில் நன்கு தேய்க்க வேண்டும்.

** மேலும் இந்த மருந்து கலந்த தண்ணீரை கொட்டகையினுள் தரை, சுவற்றிலும் தெளிக்க வேண்டும். ஏனெனில் உண்ணிகள் ரத்தத்தை குடித்துவிட்டு தரையில் முட்டைகளை இட இருக்கும். 

** ஒரு உண்ணி சுமார் 18000 முட்டைகளை இடும். ஒரு உண்ணியை விட்டாலும் அதிலிருந்து 18000 உண்ணிகள் பெருகி கால்நடைகளில் ஏறிக்கொள்ளும். 

** எனவே உண்ணிகளை தடுக்க மாடுகளின்மேலும் கொட்டகையின் தரை மற்றும் சுவற்றிலும் உண்ணிநீக்க மருந்தை தெளிக்க வேண்டும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios