சாமந்திப் பூ பூச்சிக்கொல்லி எப்படி தயாரிக்கப்படுகிறது? அதன் பயன்கள் என்ன?
தாவரங்களிலிருந்து கிடைக்கக் கூடிய சில பொருட்கள் தாவரப் பூச்சிக் கொல்லியாகவும், நூற்புழுக் கொல்லியாகவும், பூச்சிகளைக் கவரக்கூடிய பொருட்களாவும், தடுத்து விரட்டக் கூடிய பொருட்களாகவும் பயன்படுகின்றன.
சாமந்தி பூ பூச்சிக் கொல்லி
சாமந்தி பூவிலிருந்து கிடைக்கும் “பைரித்ரம் பூச்சிக்கொல்லி”. கிரைசாந்திமம் சினரேரி போலியம் எனப்படும் சாமந்தி வகைச் செடிகளிலிருந்து இது அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது.
இந்த செடியிலுள்ள பூக்களைப் பறித்து உலர்த்தி நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்பு அதனுடன் களிமண் தூள், சுண்ணாம்பு அல்லது டால்கம் தூள் போன்ற செயல் திறனற்ற பொருட்களைக் கலந்து பைரித்ரம் தூவும் தூள் தயாரிக்கப்படுகிறது.
பூக்களிலுள்ள நச்சுப் பொருளை பிரித்து எடுத்து தெளிப்பதற்கும் பயன்படுத்தலாம்.
ஒரு பங்கு பைரித்ரம் மருந்துடன் 10 பங்கு பைப்ரோனில் பியூட்டாக்சைட் என்ற இராசயனப் பொருளை கலந்து பைரகோன் எனும் பெயரில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கப்படுகிறது.
பயன்கள்:
சாறு உறிஞ்சும் பூச்சிகள், வீட்டில் காணப்படும் பூச்சிகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தவும், கால்நடைகளைத் தாக்கக் கூடிய வெளி ஒட்டுண்ணிகளை தடுத்து விரட்டவும் பயன்படுகிறது.