கோழிகளுக்கு ஏற்ற தீவன தொட்டிகளில் எத்தனை வகைகள் இருக்கு தெரியுமா?
தீவனத் தொட்டிகளின் வகைகள்:
1. தானியங்கி தீவன தொட்டிகள்
இவைகள் கோழிக்கொட்டகையின் மொத்த நீளத்திற்கு தள்ளி செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
மின்சாரத்தில் இவை இயங்ககூடியது. இதன் உயரம் கோழிகளின் வயதுக்கேற்ப மாற்றி கொள்ளலாம்.
2.நீளமான தீவனத்தொட்டி
வெவ்வெறு நீளங்களில் தடுப்புகள் கொண்டவையாக கிடைக்கிறது.
உயரத்தை மாற்றிக்கொள்ள வசதிகள் உள்ளன.
இவைகள் பொதுவாக துருபிடிக்காத இரும்பினால் தயாரிக்கப்பட்டிருக்கும். சில சமயங்களில் மரம் மற்றும் மூங்கிலால் செய்யப்பட்டிருக்கும்.
தீவனத்தொட்டிகள் ஆடாமல் இருக்கவும் உயரத்தை மாற்றிக்கொள்ளவும் தேவையான வசதிகள் உள்ளன.
கோழிகள் தீவனத்தொட்டியின் இருபுறங்களிலும் இருந்து தீவன எடுக்கும்.
மொத்த தீவன இடம் = 2 X தீவனத்தொட்டியின் நீளம்.
நீளமான தீவனத்தொட்டிகள் = (2 X தீவனத்தொட்டியின் நீளம்) ÷ தீவனத்தொட்டியின் அளவு ( செ.மீ.)
3. வட்ட தீவனத்தொட்டி
இவை பாதி தானியங்கி தீவனத்தொட்டிகள் ஆகும். இதிலுள்ள உருளை போன்ற அமைப்பில் 5 -7 கிலோ வரை போட்டு வைக்கலாம்.
தீவனம் மெதுவாக புவிஈர்ப்பு விசையால் தீவனத்தொட்டிக்கு கீழே செல்லும்.
இதில் தடுப்புகளை அமைத்து தீவன விரயத்தை தடுக்கலாம்.
இவைகள் பிளாஸ்டிகினால் தயாரிக்கப்படுகிறது.மேலும் இவைகள் கூரையிலிருந்து அல்லது தனியாக குழாய் அமைத்து அதில் இருந்து தொங்கவிடப்படுகிறது.
இவைகள் தொங்கும் தீவனத்தொட்டிகள் எனவும் அழைக்கப்படுகிறது.
இவைகள் வெவ்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. இந்த தீவனத்தொட்டிகள் நிறைய தீவனம் ஒரு முறை இட்டால் ஏறக்குறைய 4- 7 நாட்கள் வரை கோழிகளின் வயது மற்றும் தீவனம் சாப்பிடும் எண்ணிக்கை பொறுத்து போதுமான இருக்கும்.
இதன் உயரத்தை சின்ன வசதி மூலம் சுலபமாக மாற்றி கொள்ளலாம்.
இவைகள் வெவ்வேறு வண்ணங்ளில் பளிச்சென்று ( நீலம் மற்றும் சிவப்பு ) இருப்பதால் முட்டைகோழிகள் மற்றும் இளங்குஞ்சுகள் ஈர்க்கப்பட்டு தீவனம் உட்கொள்ளுவது எளிதாக நடைபெறுகிறது.
தொங்கும் தீவனத்தொட்டிகளின் எண்ணிக்கை = 1.3* ( சுற்றளவு ÷தீவன உண்ணும் இடளவு ) செ.மீ.ல்
நீளவாக்கு தீவனத்தொட்டிகளை விட தொங்கும் தீவனத்தொட்டிகளில் 30 சதவீதம் அதிகம் கோழிகள் தீவனம் உண்ணும்.
4. கிளிஞ்சல் பெட்டி
முட்டைகோழிகளுக்கு தேவையான சுண்ணாம்பு சத்துக்காக கிளிஞ்சல் வைப்பதற்கு இவைகள் உபயோகப்படுத்தபடுகிறது.