ஆடுகளுக்குத் தேவையான கொட்டகைகளை எப்படியெல்லாம் அமைக்கலாம்? இதை வாசிங்க தெரியும்?

How can shed the shelter for the sheep? Know how to read this
How can shed the shelter for the sheep? Know how to read this


** மிதமான உற்பத்தி திறனுக்கு, குறைந்த செலவிலான, கட்டுமான பொருட்களை கொண்டு சாதாரண கொட்டகை அமைத்தல்.

** அதிக மழை பெய்யும் இடங்களைத் தவிர, நாட்டின் பிற இடங்களில் மண் தரையிலான கொட்டகையே ஏற்றது.

** தண்ணீர் தேங்குவதை தவிர்க்க மேடான பகுதிகளில் கொட்டகை அமைத்தல் வேண்டும். வளரும் ஆடுகளின் தீவனத் தேவைக்கு கொட்டகையை சுற்றிலும் பசுந்தீவன மரங்களை வளர்த்தல்.

** ஆடுகளுக்கு தூய்மையான குடிநீரை கிடைக்கச் செய்தல். நுல்ல காற்றோட்டமான அமைப்புடன் கொட்டகை அமைத்தல்.

** கொட்டகையின் தரையானது நல்ல கெட்டியான முறையில் தண்ணீரை உறிஞ்சும் வகையில் இருத்தல் வேண்டும். தரையை எளிதில் சுத்தம் செய்வதற்கு உகந்தவாறு அமைத்தல் நல்லது.

** பராமரிப்பு முறைக்கு ஏற்றவாறு கொட்டகைகளை அமைத்தல் வேண்டும். திறந்த நடைவழி பகுதி மற்றும் கூரை அமைக்கப்பட்ட பகுதிகள் கொண்ட திறந்த வெளி கொட்டகை சிறந்தது.

** நடைவழி பகுதியை கட்டு கம்பி கொண்டு சுற்நி அமைத்தல் நல்லது. இரவு மற்றும் மழை காலங்களில் தங்குவதற்கு உகந்த கொட்டகையமைப்பு அவசியமாகும்.

** காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் கொண்ட கிழக்கு , மேற்கு திசையில் அகலப்பகுதி இருக்குமாறு அமைத்தால் தரையானது நன்கு காய்ந்திருக்கும்.

** குறைந்த செலவு மற்றும் தாங்கும் திறன் கொண்ட தென்னை மற்றும் பனை ஓலையிலான கூரை மிகவும் சிறந்தது.

** அதிக தாங்கும் திறன் மற்றும் பழுது பார்க்கும் செலவுகளை குறைக்கவல்ல ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் பெரிய பண்ணைகளுக்கு ஏற்றது.

** சிறிய கொட்டகைகளுக்கு சாய்வான கூரைகளே சிறந்தது. காலை நேரங்களில் மேய்ச்சலுக்கும் இரவு நேரங்களில் கொட்டகைகுன்றம் வளர்க்கப்படும். ஆடுகளுக்கு கூரை வேயப்பட்ட இடவசதியே போதமானது.

** கூரை பகுதி மற்றும் திறந்த வெளி நடை பகுதி கொண்ட கொட்டகையமைப்பு தீவிர முறையில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு உகந்தது.

** கொட்டகையமைப்பின்  அகலப்பகுதியானது 8 முதல் 12 மீட்டருக்கு மிகாமல் இருக்குமாறு அமைத்தலும், நீளப்பகுதியானது ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கட்டுபாடின்றி அமைத்துக் கொள்ளலாம்.

** கூரையின் நடுப்பகுதியின் உயரம் 3.5 மீட்டராகவும், பக்கவாட்டு பகுதியின் உயரம் 2.5 மீட்டராக இருத்தல் நல்லது.

** கொட்டகையை சுற்றி அமைக்கப்படும் கட்டுக் கம்பி அமைப்பின் உயரம் 4 அடியாக இருத்தல் வேண்டும்.

** அடர் தீவனம், பசுந்தீவனம் மற்றும் தண்ணீர் வைப்பதற்கு ஏற்றவாறு தனித்தனி தீவன மற்றும் தண்ணீர் தொட்டிகள் அமைத்தல் நல்லது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios