அதிக மருத்துவக் குணங்களும், அதிக லாபமும் தரும் கறிவேப்பிலை…
- சாகுபடியில் ஒரே ஆண்டில் ஆறு முறை அறுவடை செய்து விவசாயிகள் அதிக லாபம் ஈட்ட முடியும்.
- சமையலில் அதிகளவில் இடம் பெறுவது கறிவேப்பிலை. கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு கொத்து 50 காசுக்கு விற்கப்பட்டு வந்த கறிவேப்பிலை தற்போது 2 ரூபாய் வரை விற்கப்படும் அளவிற்கு மவுசு கூடியுள்ளது.
கறிவேப்பிலை வகைகள்
- , தார்வாட் 1, தார்வாட் 2 ஆகிய ரக கறிவேப்பிலை தற்போது சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
மண் வகை:
- கலந்த செம்மண். வண்டல் மண் மற்றும் நல்ல வடிகால் வசதியுள்ள மண்.
நடவு முறை:
- செடிகளாக வளர்க்க 2.5 மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
- செடிகளாக வளர்க்க 1.2 மீ இடைவெளி வேண்டும்.
- மகசூல் பெற 60 செ.மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்
- நடவு செய்தால் 45 முதல் 60 நாள்களுக்கு ஒரு முறை அறுவடை செய்ய முடியும்.
- இருந்து 10 செ.மீ. உயரம் விட்டு அறுவடை செய்ய வேண்டும்.
உரமிடுதல்:
- 1 அடி ஆழத்தில் சதுர குழித் தோண்டி நாற்றுகளைச் சுற்றி மக்கிய தொழுவுரம் இடவேண்டும்.
- உரத்தை மண்ணுடன் சேர்த்து கிளறி விட வேண்டும்.
- ஒரு முறையும், மூன்றாம் நாள் ஒரு முறையும், பின்னர் வாரம் ஒருமுறையும் நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
- : ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னரும் ஒரு செடிக்கு 20 கிலோ தொழுவுரத்தை இட்டு கொத்தி விடவேண்டும்.
பயிர் பாதுகாப்பு:
- தாக்கும் நோய் இலைப்புள்ளி நோயாகும். இதில் இருந்து பாதுகாக்க கார்பன்டைசிம் என்ற பூச்சிக்கொல்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கிராம் அளவு கலந்து செடிகள் முழுவதும் நனையும் வரை தெளிக்க வேண்டும்.
அறுவடை மற்றும் மகசூல்:
- செய்யும் முறையைப் பொறுத்து மகசூல் மாறுபடும்.
- 60 செ.மீ. இடைவெளியில் நடவு செய்தால் முதலில் 6 முதல் 9 மாதத்தில் முதல் அறுவடை செய்யலாம்.தொடர்ந்து 45 முதல் 60 நாள்களில் அறுவடை செய்யலாம்.
- ஏக்கருக்கு 2000 கிலோ வரை அறுவடை செய்ய முடியும்.
- கறிவேப்பிலை ஒரு கிலோ ரூ.30 முதல் 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இன்னும் விசேஷ நாள்களில் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது.மருத்துவக் குணங்களுக்காக சாகுபடி செய்யும் கறிவேப்பிலை ரகங்களுக்கு தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.